Living Together Girl Killed: உணவு பரிமாற மறுத்த 32 வயது பெண் கழுத்தை நெரித்துக்கொலை; லிவிங் டுகெதர் காதலன் வெறிச்செயல்.!
தினமும் மதுபானம் அருந்திவிட்டு வந்து திருமணம் செய்யாமல் தன்னுடன் வாழ்க்கையை தொடங்கிய பெண்ணிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்துக்கொண்ட தொழிலாளி, இறுதியில் அவரை கொலை செய்த பயங்கரம் குருகிராமில் நடந்துள்ளது.
மார்ச் 17, குருகிராம் (Haryana News): ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம், பாலம் விஹார், சாயுமா கிராமத்தை சேர்ந்தவர் லல்லன் யாதவ் (வயது 35). இவரின் சொந்த ஊர் பீகார் மாநிலம் ஆகும். தற்போது வேலைக்காக குருகிராமில் தங்கி இருக்கிறார். டெல்லியை சேர்ந்த பெண்மணி அஞ்சலி (வயது 32). இவர்கள் இருவருக்கும் இடையே பணியிடத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
லிவிங் டுகெதர் வாழ்க்கை: அதாவது, கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இருவரும், அங்கு கிடைத்த பழக்கத்தின் பேரில் நட்பாக பேசி வந்துள்ளனர். ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல், லிவிங் டுகெதர் முறையில் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். சமீபகாலமாகவே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவியதாக கூறப்படுகிறது.
வாக்குவாதம் கொலையில் முடிந்தது: இந்நிலையில், மார்ச் 13ம் தேதி இரவு நேரத்தில் சாப்பிடுவது தொடர்பாக இருவருக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. லல்லன் உணவை எடுத்துவைக்க கூறியபோது, அஞ்சலி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த லல்லன், அஞ்சலியை பெல்டால் கழுத்தை நெரித்து கொலை செய்தார். Manjummel Boys TN Box Office: தமிழ்நாடு பாக்ஸ் ஆபிசில் அடித்து நொறுக்கிய மஞ்சும்மேல் பாய்ஸ்; ரூ.50 கோடியை கடந்து வசூல் சாதனை.!
கழுத்து நெரித்து கொலை: கழுத்து நெரிக்கப்பட்டதில் அஞ்சலி துடிதுடித்து உயிரிழக்க, லல்லன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். வீடு திறந்து கிடைப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர், வீட்டிற்குள் சென்றுபார்த்தபோது விபரீதம் புரிந்துள்ளது. இதனையடுத்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மதுபோதையில், உணவு பரிமாறாததால் நடந்த கொடூரம்: விசாரணையில், கடந்த 7 மாதமாக ஜோடி லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததும், லல்லன் தினமும் மதுபானம் அருந்திவிட்டு வந்து அஞ்சலியிடம் பிரச்சனை செய்வதும் தொடர்கதையாக நடந்து வந்தது உறுதியானது. சம்பவத்தன்றும் மதுபோதையில் வந்த லல்லன், உணவை பரிமாறவில்லை என்று சண்டை செய்து அஞ்சலியை கொன்றது உறுதியானது. லல்லனுக்கு வலைவீசிய அதிகாரிகள், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.