Ladakh Earthquake: லடாக் பகுதியில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு.!
இந்தியாவின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள லடாக் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 05, லடாக் (Ladakh): துருக்கி - சிரியா நிலநடுக்கத்தை தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் எதிர்காலத்தில் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டு இருந்தது. அதனை உறுதி செய்யும்பொருட்டு, அவ்வப்போது இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் உள்ள நிலப்பரப்புகளில் நிலநடுக்கமும் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டுக்குள் நேபாளம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு மக்கள் உயிரிழந்த சோகமும் நடந்தது. Acid Attack: காதலை ஏற்றுக்கொள்ள மறுத்த இளம்பெண், சகோதரர் மீது ஆசிட் வீசி தாக்குதல்; 21 வயது இளைஞரை சுட்டுப்பிடித்த காவல்துறை.!
லே, லடாக் பகுதியில் நிலநடுக்கம் (Leh Ladakh Earthquake Today):
இந்நிலையில், இன்று காலை லடாக் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. லே, லடாக் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 4.3 புள்ளிகளாக பதிவாகி இருக்கிறது. காலை 03:49 மணியளவில், பூமிக்கடியில் 140 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.