Bus Accident: சொகுசு பேருந்து லாரி மீது மோதி பயங்கர விபத்து; 10 பேர் பலி., 24 பேர் படுகாயம்.!

இந்த சம்பவத்தில் 10 பேர் பலியாகினர்.

MP Train Accident (Photo Credit: @PTI_News X)

செப்டம்பர் 29, மைஹர் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள மைஹர் மாவட்டத்தில், இன்று தனியாருக்கு சொந்தமான சொகுசு பேருந்து (MP Bus Accident) 40 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணம் செய்துகொண்டு இருந்தது. இந்த பேருந்து நள்ளிரவு 11 மணியளவில், கற்கள் பாரம் ஏற்றிச்சென்ற லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது. சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது, பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. Kolkata Tram End of Era: முடிவுக்கு வருகிறது கொல்கத்தாவின் சகாப்தம்; டிராம் சேவைக்கு முடிவுகட்டியது மேற்குவங்க அரசு.! 

10 பேர் பலி., 24 பேர் படுகாயம்:

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இவ்விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 10 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 24 க்கும் மேற்பட்டோர் படுகாயடத்துடன் அலறித்துடித்துனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர், துரிதமாக செயல்பட்டு காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாக்பூர் நோக்கி பயணிக்கும்போது சோகம்:

அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ப்ரயாக்ராஜ் நகரில் இருந்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் நோக்கி பேருந்து பயணித்தபோது, மத்திய பிரதேசம் மாநிலத்தில் விபத்தில் சிக்கிக்கொண்டது தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

விபத்தில் சிக்கிய பேருந்தில் இருந்து மீட்கப்படும் பயணிகள்:



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif