Fake Currency Notes: யூடியூப் பார்த்து கள்ளநோட்டுகள் அச்சடிப்பு; வறுமையை போக்க புது டெக்னீக்.. 26 இளைஞர் கைது.!
வறுமையை போக்க திரைப்பட பாணியில் யோசித்த இளைஞர் கள்ளநோட்டுகளை அச்சடித்து உலாவவிட, இறுதியில் காவல் துறையினர் இளைஞரின் கைக்கு காப்பு போட்ட சம்பவம் நடந்துள்ளது.
மே 19, மும்பை (Maharashtra News): மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை (Mumbai), தலோஜா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சில வாரங்களாகவே போலியான ரூபாய் நோட்டுகள் உலாவி வந்துள்ளன. இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மாற்று சீருடையில் அவ்விடத்தை கண்காணித்து வந்துள்ளனர். இதனிடையே, காவல் துறையினரால் அப்பகுதியில் தனியாக வசித்து வந்த பிரபுல் கோவிந்த் பாட்டில் என்ற 26 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
யூடியூப் பார்த்து கள்ளநோட்டுகள் அச்சடிப்பு: அவரின் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.2 இலட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் (Fake Currency Notes), அதனை அச்சடிக்க பயன்படுத்திய இயந்திரங்கள் ஆகியவற்றையும் கைப்பற்றினர். விசாரணையில், 09ம் வகுப்பு வரை மட்டுமே பயின்றுள்ள பாட்டில், தற்போது நிதிச்சுமை காரணமாக குடும்பத்தை விட்டு தனியே பிரிந்து வசித்து வருகிறார். இவர் தனது நிதித்தேவையை பூர்த்தி செய்ய யூடியூபில் எதிர்பாராத விதமாக கள்ளநோட்டுகள் அச்சடிக்கும் வீடியோவை பார்த்துள்ளார். Naturals Ice Cream Founder Passed Away: ரூ.400 கோடிக்கு அதிபதியான பழ வியாபாரியின் மகன்; இளம் தலைமுறைக்கு முன் உதாரணமான தொழிலதிபர் மறைவு.!
காவல்துறையினர் தீவிர விசாரணை: பின் அதனை பயன்படுத்தி ரூ.10 முதல் ரூ.200 வரை அச்சடித்தவர், அதனை சந்தையிலும் புழக்கத்திற்கு விட்டுள்ளார். தற்போதுவரை ரூ.1 இலட்சம் மதிப்பிலான போலி நோட்டுகள் சந்தையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி ரூ.2 இலட்சம் மதிப்பிலான போலி நோட்டுகளை அச்சடித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குள் அதிகாரிகள் பாட்டிலை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து நவி மும்பை குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.