Raghunandan Srinivas Kamath

மே 19, மும்பை (Mumbai): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, அம்போலி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ரகுநந்தன் ஸ்ரீனிவாஸ் காமத் (). இவர் அங்குள்ள சுற்றுவட்டாரங்களில் பிரதானமாக விற்பனை செய்யப்படும் நேச்சுரல்ஸ் ஐஸ்கிரீம் (Naturals Ice Cream) நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இவர் தனது 70 வயதில் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தியுள்ளார். ஸ்ரீனிவாசின் இறுதிச்சடங்கு நேற்று மாலை அந்தேரி மேற்கு பகுதியில் இருக்கும் அம்போலியில் நடைபெற்றது.

வியாபார நுணுக்கம்: ஏழை மாம்பழ வியாபாரிக்கு மகனாக பிறந்த ரகுநாதன் ஸ்ரீனிவாஸ் காமத்தின் சொந்த ஊர் கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் ஆகும். தனது 14 வயதில் மங்களூரில் இருந்து மும்பைக்கு புறப்பட்டு வந்தவர், தனது உறவினரின் இனிப்பகம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு வந்து சாப்பிடும் மக்களுக்கு ஐஸ்கிரீம் தேவை இருப்பதை நன்கு புரிந்துகொண்டவர், அதனை தரமாக வழங்க முயற்சி செய்துள்ளார்.

ரூ.400 கோடிக்கு அதிபதி: இதற்காக தனது தந்தையின் ஆலோசனையை பயன்படுத்தி, ஐஸ்கிரீமில் பழங்களை சேர்த்து இயற்கையான முறையில் அதனை பக்குவப்படுத்தி ஐஸ்கிரீமாக வழங்கி இருக்கிறார். இதற்கு மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி இருக்கிறது. முதலில் தனது உறவினரின் கடையில் சிறு முயற்சியாக தொண்டகப்பட்ட தொழில், பின்னாளில் தனியாக நிறுவனத்தை அமைக்க வழிவகை செய்துள்ளது. இன்று அதன் மதிப்பு என்பது ரூ.400 கோடி ஆகும். Karupatti Coffee Recipe: சளி, இருமலை விரட்டும் கருப்பட்டி காப்பி செய்வது எப்படி..? விவரம் உள்ளே..! 

பிரபலமான ஐஸ்கிரீம் கடை: ஐஸ்கிரீம் தொழிற்துறையில் புதிய புரட்சியை உண்டாக்கி, அதனை செயல்படுத்தி வெற்றியடைந்த காமத், பலருக்கும் முன்மாதிரியாகவும் இருந்துள்ளார். இதனால் அவரை பலருக்கும் தெரியும். பிரபலமான நடிகர்கள் மற்றும் நடிகைகளும் அவரின் கடைக்கு நேரில் சென்று ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டு மகிழ்வார்கள்.

12 மாறுபட்ட ஐஸ்கிரீம்: கடந்த 1984ம் ஆண்டு மும்பையின் ஜூஹூ பகுதியில் சிறிய ஐஸ்கிரீம் நிறுவனத்தை தொடங்கியவர், இன்று ரூ.400 கோடி சொத்துக்கு அதிபதியாகவும் இருந்துள்ளார். தொடர்ந்து நிறுவனம் முன்னேற்றப்பாதையில் வளர்ச்சியை பெற்று வருகிறது. காமத் நிறுவனத்தை தொடங்கும்போது 12 விதமான மாறுபட்ட ஐஸ்கிரீம்களை வழங்கி இருக்கிறார். அதனை இன்றளவும் தொடர்ந்து வருகிறார்.

திருமணமாகி மனைவி, 2 மகன்களுடன் வசித்து வந்த காமத்தின் மறைவு பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மகன் சித்தார்த் நேச்சுரல்ஸ் ஐஸ்கிரீம் நிறுவனத்தின் முதன்மை இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். தந்தையின் மறைவைத்தொடர்ந்து அவர் நிறுவனத்தை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.