Deepawali Gift to Employees: அடிசக்க.. தீபாவளி பரிசாக, 15 ஊழியர்களுக்கு இருசக்கர வாகனம் பரிசு; இன்ப அதிர்ச்சி கொடுத்த நீலகிரி தேயிலைத்தோட்ட உரிமையாளர்.!
இந்தியா முழுவதும் தீபஒளி பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களுக்கு தீபஒளி பரிசு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
நவம்பர் 03, நீலகிரி (Social Viral): தமிழ்நாட்டின் மிகமுக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகவும், மேற்குத்தொடர்ச்சி மலையின் மீது அமைந்துள்ள குளுகுளு மாவட்டமாகவும் இருப்பது நீலகிரி. இம்மாவட்டத்தில் பிரதமாக தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அங்குள்ள தேயிலை, சாக்லேட் போன்றவை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தற்போது இந்தியா முழுவதும் தீபஒளி பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களுக்கு தீபஒளி பரிசு வழங்கும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றன. அந்தந்த நிறுவனங்களின் வளர்ச்சி, உரிமையாளர்களின் மனம், தலைமை செயல் அதிகாரிகளின் எண்ணத்திற்கேற்ப ஊழியர்களுக்கு அள்ளியும்-கிள்ளியும் தீபாவளி போனஸ் மற்றும் பரிசு வழங்கப்படும். சில இடங்களில் அவையும் கிடைக்காது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி (Kotagiri, Nilgiris) பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தேயிலை தோட்டத்தின் உரிமையாளர் சிவகுமார். இவர் தனது நிறுவனத்தில் சிறப்பாக வேலைபார்த்த 15 ஊழியர்களுக்கு, இன்ப அதிர்ச்சியாக தீபாவளி பரிசாக இருசக்கர வாகனங்களை வழங்கியுள்ளார். Fire on Apartment: அடுக்குமாடி குடியிருப்பின் 3வது தளத்தில் தீ விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்.!
ஊழியர்களின் உழைப்பின் காரணமாகவே தனக்கு இலாபம் வருகிறது, அவர்களுக்கும் நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இருக்கும் சிவகுமார், தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருசக்கர வாகனங்களை தீபாவளி பரிசாக வழங்கி இருக்கிறார்.
சுமார் 60 ஏக்கர் பரப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட தேயிலை தோட்டம், இன்று ஊட்டியே திரும்பி பார்க்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. அதற்கு காரணமாக பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் உழைப்பால் எனக்கு கிடைத்த இலாபத்தை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பி பரிசு அளித்ததாகவும் சிவகுமார் தெரிவித்தார்.