Youngster Suicide: 3 மாத சம்பளத்தை கொடுக்காததால் விரக்தி; 24 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.. கடிதத்தில் அதிர்ச்சி தகவல்.!

உடல்நல சிகிச்சைக்கு கூட செல்ல பணம் இல்லாமல் அவதிப்பட்ட இளைஞர், தான் பணியாற்றும் நிறுவனத்திடம் சம்பளத்தை கேட்டு மனம் நொந்து இறுதியில் தற்கொலை செய்துகொண்டார்.

Victim Dimpil Kumar | Hanged Suicide File Pic (Photo Credit: @SachinGupta X / Pixabay)

மே 03, நொய்டா (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா, செக்டர் 62, சி பிளாக் பகுதியில் டெக்சர்ஸ் ப்யோலேப்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் அங்குள்ள அலிகார்க் பகுதியை சேர்ந்த டிம்பிள் குமார் என்ற 24 வயது இளைஞர், இங்கு ஆய்வக சோதனை ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பிஷான்புரா பகுதியில் தனது சகோதரருடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருக்கிறார்.

சம்பளம் இல்லாமல் கஷ்டத்தில் நாட்களை கடத்திய ஊழியர்கள்: இந்நிலையில், கடந்த 3 மாதங்களாகவே இந்நிறுவனத்தில் பணியாற்றி வரும் டிம்பிள் குமார் உட்பட 29 தொழிலாளர்களுக்கு நிறுவனத்தின் சார்பில் ஊதியம் வழங்கப்படவில்லை. நிறுவனத்தாரிடம் ஊதியம் குறித்து கேட்டபோது, அடுத்த மாதம் என 3 மாதங்கள் நிறைவடைந்துவிட்டது. தற்போது பணியாற்றி வருவோரும், வேறு வழியின்றி சிரமத்திற்கு மத்தியில் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.

24 வயது இளைஞர் விரக்தியில் தற்கொலை: இவர்களில் டிம்பிள் குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்காக மருத்துவ சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டுள்ளது. அதற்காக பணம் கேட்டும் பலனில்லை. கடந்த 90 நாட்களாக தினமும் தனது உரிமையாளரிடம் டிம்பிள் குமார் சம்பளத்தை கேட்கும்போதெல்லம் அவர் நாட்களை கடத்தி வந்துள்ளார். இந்நிலையில், ஒருகட்டத்தில் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற டிம்பிள் குமார், நேற்று இரவு 10 மணியளவில் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டார். Workers Beaten by Employer: தொழிலாளிகளை சாட்டையால் அடித்து துன்புறுத்திய முதலாளி.. தொழிலாளர் தின கொண்டாட்டம் முடிவதற்குள் பரபரப்பு; அதிர்ச்சி காட்சிகள் லீக்.! 

காவல்துறையினர் விசாரணை: இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், டிம்பிள் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பளம் பாக்கி காரணமாக டிம்பிள் தனது உயிரை மாய்த்துகொண்டது உறுதியானது. அவர் கைப்பட எழுதிய தற்கொலை கடிதமும் கைப்பற்றப்பட்டது. அதில் தற்கொலைக்கான காரணத்தையும் அவர் குறித்து வைத்திருந்தார்.

தற்கொலைக்குறிப்பில் பரபரப்பு தகவல்: அந்த கடிதத்தில், "எனது வாழ்க்கையினை அழித்த நிறுவனம் தான் டெக்ஸாஸ் லெப். இந்நிறுவனம் எனக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளத்தை வழங்கவில்லை. நோய்க்கு சிகிச்சை பெறவும் பணம் இல்லை. எனது வாழ்க்கையில் பணம் மிகப்பெரிய வேலையை செய்துவிட்டது. எனது ஊதியத்தை அந்நிறுவனம் தரவில்லை. நான் எனது உலகத்தை விட்டுச்செல்ல மிகப்பெரிய காரணம் இந்நியூர்வனம் தான். தம்பி நீ படிப்பில் கவனம் செலுத்து. என்னைப்பற்றி கவலைப்பட வேண்டாம். நீ அரசு ஊழியராக வேண்டும். உனது எதிர்காலம் உன்னுடையது மட்டுமல்லாது, நம்மை கவனிக்கும் பெற்றோருக்கும் உரியது. அப்பா, அம்மா எனது குடும்பத்தை நேசிக்கிறேன். லவ் யூ" என எழுதியுள்ளார்.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif