குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை; மாமியார் வீட்டில் வரதட்சணை கொடுமையால் மணமான 2 ஆண்டுகளில் சோகம்.!

2 ஆண்டுகளுக்கு முன் இளம்பெண் குழந்தையுடன் உயிரிழந்த விவகாரத்தில், கணவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். வரதட்சணை கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டிய விவகாரத்தில் அவரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Death Hand File Pic (Photo Credit: Pixabay)

ஜூலை 21, பள்ளிகொண்டா (Vellore News): வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா, கந்தனேரி, பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் வரதராஜன். இவரின் மகன் குமார் (வயது 30). இவர் வேலூரில் கார் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். குமாரின் மனைவி ப்ரவீனா. இவர் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அன்று, தனது ஒரு வயதுடைய பெண் குழந்தையை இடுப்பில் கட்டியவாறு விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து உயிரைமாய்த்துக்கொண்டார். ப்ரவீனாவின் தற்கொலை சமயத்தில், அவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆகியிருந்துள்ளது. Doctor Cheated Young Girl: பயிற்சி மருத்துவரை ஏமாற்றி உல்லாசம்; மனைவி இருக்க இளம்பெண்ணின் வாழ்க்கையை சீரழித்த மருத்துவர்.! 

வரதட்சணை கொடுமையால் நடந்த விபரீதம் அம்பலம்:

இதனால் தற்கொலை விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மட்டுமல்லாது, வருவாய் கோட்டாட்சியரின் விசாரணையும் நடைபெற்று வந்தது. தற்போது இந்த விசாரணையில் அதிர்ச்சி திருப்பமாக ப்ரவீணாவிடம் அவரின் கணவர் மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியது தெரியவந்துள்ளது. வரதட்சணை கொடுமையின் காரணமாக மனமுடைந்துபோன ப்ரவீனா, குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துவந்தது அம்பலமானது. இதனையடுத்து, குமாரை கைது செய்ய வேலூர் மாவட்ட உதவி காவல் ஆணையருக்கு பரிந்துரை செய்யப்படவே, அவர் வழங்கிய உத்தரவின் பேரில் பள்ளிகொண்டா காவல்துறையினர் குமாரை கைது செய்தனர்.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement