ஜூலை 21, கோவை (Coimbatore News): கோயம்புத்தூரில் வசித்து வரும் பயிற்சி பெண் மருத்துவர், கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், "நான் வெளிநாட்டில் பொது மருத்துவம் பயின்றுவிட்டு, கடந்த டிசம்பர், 2022-ல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒட்டி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக வேலை பார்த்து வந்தேன். அங்கு மருத்துவராக வேலை பார்த்துவந்த ஷியாம் சுந்தர் (வயது 30), என்பவருடன் எனக்கு அறிமுகம் இருந்தது.
காரிலேயே உல்லாசம்:
அவர், "எனக்கு தற்போதுவரை திருமணம் ஆகவில்லை. நான் உன்னை காதலிக்கிறேன். திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்" என கூறினார். அவரின் ஆசை வார்த்தை பின்னாளில் என்னையும் ஆட்கொண்டது. என்னை காதலிப்பதாக கூறியவர், காரில் ஊட்டியில் இருக்கும் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று சுற்றிக்காண்பித்தார். பின் ஒருகட்டத்தில் நாங்கள் காரிலேயே நெருக்கமாக இருந்த சூழலும் ஏற்பட்டது. எதிர்கால கணவர்தான் என நானும் அதற்கு அனுமதித்தேன். Shocking Video: உயிரிழந்த நாயின் உடலை சாலையில் கயிறுகட்டி இழுத்துச்சென்ற கொடுமை; பதறவைக்கும் காட்சிகள்.!
திட்டமிட்டு ஏமாற்றிய அதிர்ச்சி சம்பவம்:
இதற்கிடையில், கோவை வரதராஜபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அவர் பணிமாறுதல் பெற்றுச்சென்றார். நானும் பயிற்சியை நிறைவுசெய்து கோவைக்கு சென்றேன். அங்கும் என்னை அடிக்கடி அவர் காரில் அழைத்துச்செல்வார். கடந்த பிப்ரவரி மாதத்தில் 27ம் தேதி கோவை ஓட்டல் ஒன்றில் கணவன் - மனைவியாக அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்தார்.
மனைவி, குழந்தை இருக்க இளம்பெண்ணை ஏமாற்றய சோகம்:
அப்போது திருமணம் குறித்து நான் ஷியாமிடம் பேசினேன். வீட்டிற்கு வந்து பெண் கேட்குமாறும் கோரிக்கை வைத்தேன். அதன்பின்னர் அவர் என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டு நிலையில், நான் ஷியாம் குறித்து விசாரித்தேன். அப்போது, அவருக்கு திருமணமாகி மனைவி, ஆண் குழந்தை இருப்பது உறுதியானது. இதனால் மே 18ம் தேதி ஷியாமின் வீட்டிற்கு சென்று நடந்ததை கூறி இருந்தேன். ஷியாமின் தாய், அக்கா, மாமா ஆகியோர் என்னை திட்டி அனுப்பிவிட்டார்கள்" என கூறப்பட்டுள்ளது.
இவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என பயிற்சி மருத்துவர் கோரிக்கை வைத்ததைத்தொடர்ந்து, காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.