Indonesia Earthquake Today: இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளை தாண்டி பதிவு.!
ஆபத்தான எரிமலைகளை கொண்டுள்ள இந்தோனேஷியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
டிசம்பர் 30, ஜகார்த்தா (Jakarta): இந்தோனேஷியா தனக்குள் அழகு கொண்ட கடற்கரை, மலைகள், சமவெளிப்பகுதிகளை கொண்ட தீவு நாடாகும். இந்நாடு சுற்றுலாவுக்கு புகழ்வாய்ந்தது எனினும், ஆபத்தான எரிமலைகள், அதிகம் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளின் மீது அமைந்துள்ளது. இதனால் அந்நாட்டில் அவ்வப்போது நிலநடுக்கம் என்பது இயற்கையாகவே ஏற்படும்.
துருக்கி நிலநடுக்கம்: இந்த ஆண்டின் தொடக்கத்தில், துருக்கி - சிரியாவை மையமாக வைத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகளை மையப்படுத்தி கடுமையான நிலநடுக்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனை உறுதி செய்யும்பொருட்டு நிலநடுக்கங்களும் ஏற்பட்டு வருகின்றன. Dog Attack: செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வந்த நாய், உரிமையாளரின் ஆணுறுப்பை கடித்து வீசிய பயங்கரம்.. அதிர்ச்சி தகவல் அம்பலம்.!
நிலநடுக்கம்: இந்நிலையில், இன்று இந்தோனேஷியாவில் உள்ள மேற்கு பகுதியில் இருக்கும் அஸ்ஹ் (Ache) மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகள் என்ற மதிப்பில் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது வரை சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.