டிசம்பர் 30, லண்டன் (London): இலண்டனில் உள்ள செஸ்டர்ஃபீல்டில், டெர்பிஷையரில் பகுதியில் வசித்து வருபவர் லின்சி கெல்லி. இவர் தனது நண்பருடன் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் 44 கிலோ எடையுள்ள அமெரிக்கா எக்ஸ்எல் புல்லி நாயை, என்வி என்ற பெயர் வைத்து வளர்த்து வந்துள்ளனர்.
பிறப்புறுப்பை பதம்பார்த்த நாய்: கடந்த அக்டோபர் 10ம் தேதி செல்லப்பிராணியான நாய் தனது உரிமையாளர் மற்றும் அவரின் நண்பரை கடுமையாக தாக்கி இருக்கிறது. இதில் லின்சி படுகாயத்துடன் தப்பித்துக்கொண்டாலும், அவரின் ஆண் நண்பர் கடுமையான நாய் கடித்தாக்குதலை எதிர்கொண்டார். 44 கிலோ எடையுள்ள நாய், தனது உரிமையாளரை கடித்து குதறியது, அவரின் ஆணுறுப்பையும் பதம்பார்த்தது. Niranjan Hiranandani Travel Mumbai Train: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மின்சார இரயிலில் பயணம் செய்த தொழிலதிபர்..! விபரம் இதோ.!
உயிர்பிழைத்த ஜோடி: நாயை இருவரும் அறையில் வைத்து பூட்டிவிட்டு, அங்குள்ள மருத்துவமனைக்கு சென்று அனுமதியாகியுள்ளனர். இருவரும் தீவிர சிகிச்சைக்கு பின்னர் உயிர்பிழைத்தனர். கடுமையான உடல்நலக்குறைவுடன் அவதிப்பட்ட தம்பதி, தற்போது தான் மெல்ல உடல்நலம் தேறி வருகின்றனர். இதுகுறித்த செய்தியும் வெளியுலகுக்கு தெரிவிக்கப்படாமல் இருந்தது.
ஆபத்தான நாய்: தற்போது இருவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வீட்டிற்கு திரும்ப தயாராகுவதை தொடர்ந்து, நாயின் தாக்குதல் தெரியவந்துள்ளது. எக்ஸ்எல் புல்லி ரக நாய் மூர்க்கத்தனம் கொண்டதாக கருதப்படுகிறது. இவ்வகை நாய்கள் எந்த நேரம் தனது குணத்தை மாற்றி உரிமையாளர்களுக்கு எதிராக செயல்படும் என்பதும் தெரியாது.