Ebrahim Raisi Helicopter Crash: ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி; ஈரானிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.! டிரோன் காட்சிகள் இதோ.!!
அஜர்பைஜானில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு தாயகம் திரும்பிக்கொண்டு இருந்த ஈரான் அதிபர் விபத்தில் சிக்கி பலியானது நடந்துள்ளது.
மே 20, அஜர்பைஜான் (World News): ஈரானிய அரசியலில் முக்கிய பிரமுகரும், அந்நாட்டின் அதிபருமனாவர் இப்ராஹிம் ரைசி (Ibrahim Raisi). இவர் மேற்கு அசர்பைஜான் பகுதியில் இராணுவ ஹெலிகாப்டரில் சென்றுகொண்டு இருந்தார். அச்சமயம் ஹெலிகாப்டர் திடீரென கோளாறை சந்தித்து விபத்திற்குள்ளானதாக நேற்று தகவல் வெளியானது. ஹெலிகாப்டர் விழுந்த இடத்திற்கு மீட்பு படையினரும் விரைந்தனர். மீப்பு படையினர் உடைந்த ஹெலிகாப்டரில் பாகங்களை 17 மணிநேர தேடலுக்கு பின் கண்டறிந்த நிலையில், அந்த விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்பதால், ஈரானிய அதிபர் ரைசி விபத்தில் மறைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. Car rally in UK Support PM Modi: பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்து இங்கிலாந்தில் பிரம்மாண்ட கார் பேரணி; அசத்திய பாஜக ஆதரவாளர்கள்.!
ஹெலிகாப்டர் விபத்தில் 8 பேர் பலி: அதிபருடன் பயணித்த ஹோஸின் அமீர் அப்துல்லாஹியான் உட்பட 2 அமைச்சர்கள், இராணுவ அதிகாரிகள் உட்பட 8 பேரும் பலியாகி இருப்பது அறிவிப்புகள் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர், டெக்ரானுக்கு திரும்பும் வழியில் ஏற்பட்ட வானிலை பிரச்சனை காரணமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதால் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவரின் மறைவு அந்நாட்டு மக்கள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல உலக தலைவர்களும் தங்களின் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.
விபத்திற்குள்ளானதாக கூறப்படும் ஹெலிகாப்டரின் டிரோன் காட்சிகள்: