BJP Supporters UK Car Rally (Photo Credit: @ANI X)

மே 20, லண்டன் (World News): உலகமே கவனிக்கும் இந்திய பொதுத்தேர்தல்கள் 2024 (India Elections 2024) நான்கு கட்டங்கள் கொண்ட வாக்குப்பதிவை நிறைவு செய்து, இன்று (மே 20, 2024) ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவில் அடியெடுத்து வைத்துள்ளது. எஞ்சிய 6 மற்றும் 7வது கட்ட பொதுத்தேர்தல் (Lok Shaba Elections 2024) மே 25 மற்றும் ஜூன் 03 முறையே நடைபெறுகிறது. பொதுத்தேர்தல் மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தல், இடைத்தேர்தல் முடிவுகள் அனைத்தும் ஒரேகட்டமாக ஜூன் 04ம் தேதி வெளியாகிறது. India Elections 2024 Phase 5: விறுவிறுப்புடன் தொடங்கியது ஐந்தாம்கட்ட வாக்குப்பதிவு; வாக்குச்சாவடி மையங்களில் பலத்த பாதுகாப்பு.! 

பாஜக - காங்கிரஸ் நேரடி மோதல்: 2024 மக்களவை தேர்தலில் இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியை கைப்பற்றிய பாஜகவும், 2 முறை ஆட்சியை இழந்து போராடும் காங்கிரசும் நேரடியாக அரசியல் மோதலில் ஈடுபட்டு களத்தில் இறங்கி செயலாற்றி வருகிறது. எதிர்வரும் மக்களவை தேர்தல் கருத்துக்கணிப்பில் பாஜக தலைமையிலான கூட்டணி மத்தியிலும், தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் திமுக தலைமையிலான கூட்டணியும் அமோக வெற்றிபெறும் என தெரியவந்துள்ளது. எனினும், மக்கள் கையில் தீர்ப்பு என்பதால் ஜூன் 04ம் தேதிக்காக இந்தியர்கள் காத்திருக்கின்றனர்.

இங்கிலாந்தில் பிரம்மாண்ட பேரணி: இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் உள்ள இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் இந்தியர்களில், பாஜக ஆதரவாளர்கள் பசிங்ஸ்டோக் நகரில் பிரதமர் மோடி வெற்றிபெறும் வகையில் 100 க்கும் மேற்பட்ட கார்களில் 200 நபர்கள் சேர்ந்து பாஜக ஆதரவு கார் பேரணியை நிகழ்த்தினர். 2024 மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் அரியணையை பெறப்போகும் தங்களின் பிரதமருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கவும், அவருக்கான ஆதரவை சேகரிக்கவும் இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டதாக பாஜக பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.