College Girl Gang Raped: நண்பர்களின் சதித்திட்டம்.. 20 வயது மாணவி கத்தி முனையில் கூட்டுப்பாலியல் பலாத்காரம்: குமரியில் பதறவைக்கும் சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி.!

உலகமே நாடாக மேடையாக இருக்கும்போது, தன்னுடன் பயிலும் இரண்டு மாணவர்கள் நண்பர்களாக பழகுகிறார்கள் என நம்பிச்சென்ற மாணவிக்கு காத்திருந்த துயரங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

RAPE FILE PIC (PHOTO CREDIT: PIXABAY)

நவம்பர் 30, கொல்லம்கோடு (Kanyakumari Crime News): தன்னுடன் கல்லூரியில் பயிலும் நண்பனை கண்மூடித்தனமாக நம்பி, அவருடன் எங்கும் செல்லும் சூழல் ஏற்படினும், சுய பாதுகாப்பை ஏற்படுத்த தெரியவில்லை எனில் வாழ்க்கையில் மறக்க முடியாத வடுக்களே எஞ்சும் என்பதற்கு உதாரணமாக பல சோகங்கள் நிகழ்ந்துள்ளன. அதனைப்போன்றதொரு சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தையே அதிரவைத்துள்ளது.

கல்லூரி மாணவி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லம்கோடு (Kollamkode) பகுதியைச் சேர்ந்த 20 வயது மாணவி, அங்குள்ள தனியார் கல்லூரியில் (College Student) மூன்றாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். மாணவியுடன் சின்னத்துறை பகுதியில் வசித்து வரும் மாணவர், தூத்தூர் பகுதியை சேர்ந்த மாணவரும் வகுப்பில் உடன் பயின்று வருகிறார்கள். இவர்கள் இருவரும் 20 வயது மாணவியிடம் நட்பாக பழகி வந்துள்ளனர்.

அம்மாவுக்கு பிறந்தநாளை சிறப்பிப்பதாக நடிப்பு: கடந்த ஜூலை மாதம் விடுமுறையன்று சின்னத்துறை பகுதியை சேர்ந்த மாணவர், மாணவியின் வீட்டிற்கு சென்று தனது அம்மாவின் பிறந்தநாளை பொழியூர் கடற்கரையில் குடும்பத்தோடு சிறப்பிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தோழியான நீயும் உடன் வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மாணவியின் பெற்றோருடன் இளைஞர் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்திக்கொண்டதால், மகளை அவர்களும் நம்பி அனுப்பி வைத்துள்ளனர். Benefits of Athimathuram: உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை.. சிகிரெட்டை மறக்க நினைப்போருக்கு வரப்பிரசாதமாகும் அதிமதுரம்.. நன்மைகள் விபரம் இதோ.! 

அதிர்ச்சி கொடுத்த நண்பர்கள்: இருவரும் சிறிது தூரம் சென்றதும், தூத்தூரை சேர்ந்த மாணவர்களும் இவர்களுடன் இணைந்துள்ளார். இவர்கள் மூவரும் கேரளா மாநிலத்தில் உள்ள பொழியூர் கடற்கரைக்கு சென்றபோது, மாணவிக்கு பேரதிர்ச்சி காத்திருந்துள்ளது. அங்கு நண்பன் கூறியதைப்போல மாணவனின் தாயார், சகோதரி என யாருமே இல்லை. நடுங்கிப்போன மாணவி தன்னை வீட்டில் கொண்டு சேர்க்கும்படி கேட்டும் பலனில்லை.

துரோகியான நண்பர்: தங்களின் இருசக்கர வாகனத்தில் மறைத்து கொண்டு வரப்பட்ட மதுபானத்தை எடுத்து அருந்தத் தொடங்கியுள்ளனர். தன்னை வீட்டில் கொண்டு சென்று விடும்படி மன்றாடியும் பலனில்லை. மதுபோதை தலைக்கேற தொடங்கியதும், சின்னத்துறை பகுதியை சேர்ந்த இளைஞன் மாணவியிடம் அத்துமீற முயன்றுள்ளார். இதற்கு மாணவி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை ஏற்கனவே மதுபோதையில் வந்த 2 இளைஞர்கள் பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர்.

Sexual Harassment / Rape File Pic (Photo Credit: Pixabay)

காப்பாற்றுவது போல நடித்து பலாத்காரம்: மாணவியை நோக்கி வந்த மதுபோதை கும்பல், மாணவர்களை தாக்கி ஆடையை களைந்து நிர்வாணமாக கட்டிவைத்து தாக்கி இருக்கின்றனர். கத்தி முனையில் மாணவியையும் மிரட்டி கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த கொடுமையை வீடியோ பதிவும் செய்திடவே, வெளியே இதுகுறித்து கூறினால் விடியோவை ரிலீஸ் செய்திடுவோம் எனவும் மிரட்டி, மாணவியின் செல்போன் நம்பரை பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்துள்ளனர். Play Store’s Best Apps and Games of 2023: 2023ல் கூகுள் பிளே ஸ்டோரில் சிறந்த செயலிகள் எவை?.. அசத்தல் தகவலை தெரிவித்த கூகுள்.! 

வீடியோ வெளியானது: வீட்டிற்கு வந்த மாணவி நடந்த கொடுமையை தெரிவிக்காமல் மனம் தளர்ந்து இருக்க, காம எண்ணம் கொண்ட இருவரும் மீண்டும் மாணவியை பலாத்காரம் செய்ய எண்ணி போனில் தொடர்புகொண்டு வற்புறுத்தி இருக்கின்றனர். இதற்கு மறுத்த மாணவியை பழிவாங்குவதாக எண்ணி, சமூக வலைத்தளத்திலும் வீடியோ வெளியிட்டு இருக்கின்றனர். இந்த வீடியோ அங்குள்ள சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது.

காவல் நிலையத்தில் புகார்: இதனால் பாதிக்கப்பட்ட மாணவி பொழியூர் மற்றும் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் கேரளா மாநிலத்தில் உள்ள பொழியூரை சேர்ந்த 34 வயது ஆசாமி மற்றும் அவனது கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் இருவரும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளதால், கரை திரும்பியதும் கைது செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நின்றுபோன திருமணம்: மாணவியை பொய்யான காரணங்கள் கூறி கடற்கரைக்கு அழைத்துச்சென்ற கல்லூரி நண்பர்களான இரண்டு மாணவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களால் பாதிக்கப்பட்ட மாணவி 2 முறை தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். தற்கொலையில் இருந்து உயிர்தப்பிய பின்னரே புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர் நிச்சயித்திருத்த மணமகனும், வீடியோ குறித்த தகவலை கேட்டு திருமணத்தை நிறுத்தியதாகவும் களத்தகவல் தெரிவிக்கின்றன.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement