நவம்பர் 30, சென்னை (Health Tips): மருத்துவத்துறையில் சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் அதிமதுரம் (Athimathuram Benefits Tamil), நமது உடலுக்கு பல நன்மையை வழங்கும் குணம் கொண்டதாகும். இதன் வேறை சுவைத்தால் வித்தியாசம் கொண்ட இனிப்பு தொண்டையில் ஆவியாக கீழிறங்கும் நிகழ்வை நன்கு உணரலாம். இதன் இனிப்பு நீண்ட நேரம் நமது நா மற்றும் தொண்டைப்பகுதியில் நிலைத்து இருக்கும். இது உமிழ்நீர் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை நீக்கும்.
இன்றளவில் புகைப்பழக்கம் (Cigarette Smoking Habit) கொண்டவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது. இவ்வாறானவர்கள், புகைப்பழக்கத்தை மறக்க அதிமதுரத்தை தேர்ந்தெடுக்கலாம். சிறிதளவு அதிமதுர துண்டை (Liquorice Benefits) மென்று வரலாம். வறட்டு இருமல் சார்ந்த பிரச்சனையை சந்திப்போரும் அதிமதுரம், மிளகு, கடுக்காய் தோல் ஆகியவற்றினை பொடியாக அரைத்து சிறிதளவு இருமலின் போது வாயில் வைக்க இருமல் கட்டுப்படும்.
தொண்டை மற்றும் வாய் சார்ந்த புண்களுக்கு தொன்றுதொட்டு அதிமதுரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிமதுரத்துடன் சீரகம் சமஅளவு எடுத்து காய்ச்சி நீர் குடித்தால், கர்ப்பிணி பெண்களின் வாந்தி, இரத்தப்போக்கு பிரச்சனை சரியாகும். மஞ்சள் காமாலை நோய்வாய்பட்டவர்களுக்கு அதிமதுர வேர்ப்பொடியை தேனுடன் கலந்து கொடுக்கலாம். Play Store’s Best Apps and Games of 2023: 2023ல் கூகுள் பிளே ஸ்டோரில் சிறந்த செயலிகள் எவை?.. அசத்தல் தகவலை தெரிவித்த கூகுள்.!
கூந்தல் வளர்ச்சி அதிகரிக்க, இளநரை போக்க, வியர்வை நாற்றம் மறைய அதிமதுரம் மற்றும் அவுரி ஆலம் விழுதுகளை பயன்படுத்தலாம். சுளுக்கு பிடித்தவர்களுக்கு விளக்கெண்ணெய் தடவி, அதிமதுர இலைகளை வைத்தால் தசை இலகுவாகும். அதிமதுரத்தை நீரில் சேர்த்து பனங்கற்கண்டு, மிளகுத்தூள் சேர்த்து தேநீர் போல காலை குடித்து வந்தால், குரல் இனிமையாகும்.
சைனஸ், ஒற்றைத்தலைவலி, தலைபாரம் போன்ற பிரச்சனை ஏற்படும் சமயங்களில் சோம்பை நீரில் இட்டு கொதிக்கவைத்து, அதிமதுர தூள் சேர்த்து குடிக்கலாம். அதிமதுர சாறு உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்புண்களையும் குறைக்கும். நுரையீரலையும் சுத்தப்படும் குணம் கொண்டதா தொண்டை பிரச்சனை, ஜலதோஷம், ஆஸ்துமா உள்ளவர்களும் இதனை எடுத்துக்கொள்ளலாம்.