Lightning Strike Kills Two: கடற்கரையில் மின்னல் தாக்கி இருவர் பலி; நெஞ்சை உறையவைக்கும் அதிர்ச்சி வீடியோ உள்ளே.!

தற்போது இருவர் மின்னல் தாக்கி கடற்கரையில் உயிரிழந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி இருக்கிறது.

Lightning Strike Mexico Beach (Photo Credit: Twitter)

செப்டம்பர் 20, மெக்சிகோ (Social Viral): மழை, சூறாவளி, புயல் போன்றவை நிலப்பகுதிகளை கடந்து செல்லும்போது தனது ஆக்ரோசத்தையும் அவ்வப்போது வெளிப்படுத்திவிட்டு செல்லும். இந்தியாவை பொறுத்தமட்டில் மின்னல் காரணமாக ஒடிஷா, உத்திரபிரதேசம், உத்திரகாண்ட் உட்பட சில மாநிலங்களில் உயிர்ப்பலிகள் எப்போதும் ஏற்படும். தமிழ்நாட்டிலும் மின்னல் காரணமாக ஏற்படும் உயிர்பலி எண்ணிக்கை உள்ளது என்றாலும், அவை பிற மாநிலங்களை கவனிக்கும்போது மிகக்குறைவே ஆகும்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் மிகப்பிரம்மாண்டமாக கிளம்பி மக்களை அச்சுறுத்தும் புயல்களின் போதும், மழையின் போதும் கடுமையான மின்னல் தாக்குதல் நடக்கும். இதில் அவ்வப்போது பொதுமக்கள் சிக்கி உயிரைவிடும் நிகழ்வும் நடக்கும், அதிஷ்டம் உள்ள சிலர் தப்பிப்பார்கள். Hardeep Singh Nijjar's Killing: இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமெரிக்காவை அழைக்கும் கனடா; தயங்கும் வல்லரசுகள்.! 

ஒருங்கிணைந்த அமெரிக்காவில் ஆண்டுக்கு 40 மில்லியன் மின்னல்கள் தாக்குகின்றன. அங்கு 20 பேர் மின்னல் தாக்குதலில் பலியாகின்றனர், 100 பேர் படுகாயத்துடன் உடல்-உறுப்புகளை இழந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், மெக்சிகோவில் உள்ள மிசோயாசான் (Michaoacan) கடற்கரையில் நேற்று மழைக்கான சூழல் தயாராக இருந்தது.

அப்போது, கடற்கரையில் இருந்தவர்கள் குடில்களுக்கு செல்ல தங்களின் பொருட்களை எடுத்து பயணிக்க தயாரானபோது, கடற்கரையில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது திடீரென மின்னல் பயங்கரமாக தாக்கியது. இந்த சம்பவத்தில் 2 பேர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

எதற்ச்சையாக இயற்கை நிகழ்வை படம்பிடித்தவரின் கேமிராவில் இருவரின் மீது மின்னல் அடுத்தடுத்து தாக்கிய அதிர்ச்சி விடியோவும் பதிவானது. ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். மழைக்கான அறிகுறி தென்பட்டால் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வீடியோ உணர்த்துகிறது.