Constable Gives CPR to Save Snake: மூர்ச்சையான பாம்புக்கு சிபிஆர் சிகிச்சை கொடுத்து உயிர்பிழைக்க வைத்த காவலர்; குவியும் பாராட்டுக்கள்.!

பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்த காவலர் ஒருவர், பாம்பு பூச்சிக்கொல்லி மருந்தில் விழுந்து மூர்ச்சையாகி இருப்பதை கண்டு, அதற்கு மீண்டும் உயிர்கொடுத்தார்.

Snake Saved by Constable (Photo Credit: X)

அக்டோபர் 26, நர்மதாபுரம் (Social Viral): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள நர்மதாபுரம் பகுதியில் பாம்பு ஒன்று விவசாய நிலத்தில் வைக்கப்பட்டிருந்த பூச்சிக்கொல்லி மருந்தின் மீது விழுந்து மயங்கி மூர்ச்சையானது.

அச்சமயம் சம்பவ இடத்தில் மற்றொரு பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்த காவலர் ஒருவர், பாம்பு பூச்சிக்கொல்லி மருந்தில் விழுந்து மூர்ச்சையாகி இருப்பதை கண்டுள்ளார். இதனையடுத்து, உடனடியாக உயிர்காக்கும் சிகிச்சையை பாம்புக்கு காவலர் அளித்தார். MH Accident 10 Died: அவசர ஊர்தி - லாரி மோதி பயங்கர விபத்து; மஹாராஷ்டிராவில் இருவேறு விபத்துகளில் 10 பேர் மரணம்..! 

இதனையடுத்து, வாயோடு வாய் வைத்து ஊதி பாம்புக்கு மீண்டும் உயிர் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ சக காவலர்களால் பதிவு செய்யப்பட்டு இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது. காவலரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், இதனை அனைவரும் முயற்சிக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாம்பை கையாளத்தெரிந்த நபர்கள் மட்டுமே இது போன்ற உடனடி உயிர் காக்கும் சிகிச்சையை பாம்புகளுக்கும் முயற்சிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கின்றனர்.