Beed Accident Visuals (Photo Credit: X)

அக்டோபர் 26, பீட் (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீட் மாவட்டத்தில் (Beed, Maharashtra), இன்று ஏற்பட்ட இரு வேறு விபத்தில் 10 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் நடந்துள்ளது. பீட் மாவட்டத்தில் உள்ள தமகோன் (Dhamangaon) கிராமம் அருகே அவசர ஊதியும் - கனரக லாரியும் மோதி ஏற்பட்ட விபத்தில், மருத்துவர் உட்பட நான்கு பேர் பரிதாபமாக பலியாகினர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் பலியானோரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து சம்பவம் குறித்தும், பலியானோரின் விபரம் குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். Amy Jackson with Pets: நாய்களுடன் கொஞ்சி மகிழும் எமி ஜாக்சன்; எப்போதும் மகிழ்ச்சியாக உணர்வதாக பதிவு..! 

அதேபோல, அதே மாவட்டத்தில் உள்ள கந்தன்வாடி பக்தா (Gandhanwadi Phata) பகுதியில் 45 பயணிகளை ஏற்றுக்கொண்டு பயணம் செய்த பேருந்து ஒன்று, வளைவு பகுதியில் திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.

இன்று காலை ஏற்பட்ட இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த ஆறு பயணிகள் பரிதாபமாக நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இருவேறு விபத்துகளில் இன்று மாவட்டத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.