Shocking Video: நொடியில் பிரிந்த வாகன ஓட்டின் உயிர்: அதிவேகம், அலட்சியத்தால் நடந்த சம்பவம்.. நெஞ்சை பதறவைக்கும் வைக்கும் காட்சிகள்.!
அதனை தவிர்க்க உரிய செயல்களை பின்பற்றுவது நமது உயிரை பாதுகாக்க உதவும்.
ஜனவரி 18, நியூயார்க் (NewYork): இருசக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனங்களில் சாலையில் செல்லும் போது மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும். அதே நேரத்தில், சீரான மிதமான வேகத்துடன் பயணிப்பது, சாலையை கடக்கும் போது இருபுறமும் பார்த்து சாலையை கடப்பது போன்றவை நமது உயிரை பாதுகாப்பது மட்டுமல்லாமல், சாலையில் பயணிக்கும் மற்றொருவரின் உயிரையும் பாதுகாக்க உதவி செய்யும். Alanganallur Jallikattu: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு.. வெற்றியாளர்கள் யார்? பரிசு என்ன? எத்தனை பேர் காயம்? முழு தகவல் இதோ.!
தேசிய நெடுஞ்சாலை பயணம்: ஆனால், மனிதர்களின் அலட்சியம், அவர்களது அதீத கற்பனை திறன், அசத்திய நம்பிக்கை போன்றவை எப்போதும் வெற்றியடைவது இல்லை. சில நேரத்தில் விபரீதத்தில் முடிந்து உயிர்களையும் இழக்கவும் வழிவகை செய்யும். அந்த வகையில், கடந்த 2013 ஆம் ஆண்டு 38 வயதுடைய டேவிட் ஹோலென்ஸ் என்ற நபர், தனது இருசக்கர வாகனத்தில் 97 கிலோ மீட்டர் வேகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் பயணம் செய்தார்.
நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்: அப்போது எதிர் திசையில் வந்த கார் ஒன்று சாலையின் பக்கவாட்டு சாலையை அணுக முயற்சித்து, வந்த வேகத்தில் திரும்பியது. அதிவேகத்தில் சென்ற டேவிட்டின் இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து ஏற்படவே, இரு சக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட டேவிட் நிகழ்விடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து ஏற்பட்டதும் அவசர உதவி குழுவினர் அழைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சொல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவரின் உயிர் பிரிந்தது.
வீடியோ வைரல்: இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வழியாக வைரல் ஆகி வரும் நிலையில், சாலை வழி பயணங்களில் நாம் எவ்வளவு கவனமாக செயல்பட வேண்டும் என்பதையும், நொடியில் விபரீதம் எப்படியேனும் ஏற்படலாம் என்று நிதர்சனத்தையும் உணர்த்தும் பொருட்டு இந்த வீடியோ மறுபதிவீடு செய்யப்பட்டுள்ளது.