Mumbai Rains: கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் மும்பை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!
மும்பையில் பெய்துவரும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், சாலை போக்குவரத்து மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 26, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலத்தின் பல நகரங்களில் கனமழை (Heavy Rain) பெய்து வருவதால் அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று (செப்டம்பர் 25) மாலை முதல் மும்பை (Mumbai), தானே பால்கர் மற்றும் ராய்காட் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய நகரங்களில் அதிகனமழை பெய்து வருவதால் அப்பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department) ரெட் அலர்ட் (Red Alert) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 16-Year-Old Boy Kills Uncle: தாய் மாமாவை குத்திக்கொன்ற 16 வயது சிறுவன்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!
கனமழை காரணமாக தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனையடுத்து அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்திற்கு வர இருந்த 14 விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்கப்படாததால் வெவ்வேறு இடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. மும்பையில் நாளை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
வெள்ளத்தில் மிதக்கும் மும்பை: