16-Year-Old Boy Kills Uncle: தாய் மாமாவை குத்திக்கொன்ற 16 வயது சிறுவன்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!
மகாராஷ்டிராவில் 16 வயது சிறுவன் தனது மாமாவை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 26, லத்தூர் (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், லத்தூர் (Latur) நகரில் உள்ள அர்வி பகுதியில் நேற்று (செப்டம்பர் 25) காலை 16 வயது சிறுவன் தனது மாமாவை கத்தியால் (Murder) குத்திக் கொன்றுள்ளார். 42 வயதான அவர், தனது மைத்துனரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, தனது ஆதார் அட்டை மற்றும் வங்கி ஆவணங்களை தருமாறு மைத்துனரின் மனைவியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தர மறுத்துள்ளார். Bank Employee Dies: பணிச்சுமையால் இருக்கையில் சரிந்து விழுந்த வங்கி ஊழியர்.. துடிதுடித்து பலியான சோகம்..!
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, உடன் இருந்த அந்த பெண்ணின் 16 வயது மகன் தனது மாமாவை கத்தியால் (Knife) குத்தினார். இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், காவல்துறையினர் கொலை செய்த சிறுவன் மற்றும் அவரது தாய் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சிறுவனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Sep 26, 2024 10:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

