Diamond Statue Of PM Modi: வைரத்தால் ஆன பிரதமர் மோடி சிலை.. அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு சிறப்பு பரிசு..!

அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மற்றும் அஸ்ரித் ஆகிய இருவர், அங்கு நகை வியாபாரம் செய்து வரும் நிலையில், பிரதமர் மோடிக்கு சிறப்பு பரிசு வழங்கியுள்ளனர்.

Diamond Statue Of PM Modi (Photo Credit: Instagram)

செப்டம்பர் 23, டெலாவாரே (World News): இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் ‘குவாட்’ அமைப்பின் உச்சி மாநாடு (Quad Summit), அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் அமெரிக்காவின் டெலாவாரேயில் உள்ள வில்மிங்டனில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி (Prime Minister Narendra Modi), 21ம் தேதி அமெரிக்கா சென்றார். குவாட் உச்சி மாநாட்டில் சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தி வரும் இரண்டு விஷயங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. அவை, ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் - ஹமாஸ் போர் ஆகியவை ஆகும்.

மேலும் மூன்று நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் 297 பழங்கால சிலைகளை அந்நாட்டு அரசு இந்தியாவிடம் ஒப்படைத்து உள்ளது. அந்த வகையில் 2016ம் ஆண்டு முதல் தற்போது வரை 578 சிலைகள் அங்கிருந்து திரும்ப பெறப்பட்டு உள்ளன. SC On Child Pornography: சிறார் ஆபாச படம் பார்ப்பது குற்றமல்ல - சென்னை உயர்நீதிமன்றத்தை கண்டித்த உச்சநீதிமன்றம்..! காரணம் என்ன?..

இதற்கிடையே அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மற்றும் அஸ்ரித் ஆகிய இருவர், அங்கு நகை வியாபாரம் செய்து வரும் நிலையில், பிரதமர் மோடிக்கு சிறப்பு பரிசு வழங்கியுள்ளனர். அதாவது வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட பிரதமர் மோடியின் மினி சிலையை உருவாக்கியுள்ளனர். இந்த சிலையை, ஒன்றரை ஆண்டுகளில் 30-40 பேர் இணைந்து உருவாக்கினோம் என்று கூறினர்.

வைரத்தால் ஆன பிரதமர் மோடி சிலை: