New Zealand MP Hana Rawhiti: மவொரி பாரம்பரிய முறைப்படி, நாடாளுமன்றத்தில் உரை: வியந்து ரசித்த அவையோர்.. மெய்சிலிர்க்கவைத்த 21 வயது பெண் எம்.பி.!
நவயுகத்தில் மக்களின் அறியாமை இருள் அகற்றப்படவேண்டியது அத்தியாவசியம் எனினும், அவர்களின் நல்ல வரலர்ச்சிக்கு தேவையான பாரம்பரியம் பாதுகாக்கப்படவும் வேண்டும்.
ஜனவரி 06, நியூசிலாந்து (New Zealand): நமது உலகில் சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் இருக்கின்றன. இவற்றில் 190க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு எந்த நாட்டவரும் சென்று வர அனுமதி இருக்கிறது. ஒருசில நாடுகளுக்கு, அந்த நாடுகளின் கட்டுப்பாடு காரணமாக சென்று வர குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
அழகிய நியூசிலாந்து: பூவுலகில் நாடுகளின் பிரிவால் நிகழும் உயிருக்கு ஆபத்தான நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, சில நாடுகள் தங்களது நாட்டு மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒருசில நாடுகளுக்கு தற்காலிகமாக சென்று வர தடை விதித்திருக்கிறது. நியூசிலாந்து நாடு ஆஸ்திரேலியாவுக்கு அருகில், ஓசியானியா கண்டத்தில் அமைந்துள்ளது. Animal Fame Save Girl Life: தற்கொலைக்கு முயன்ற சிறுமியின் உயிரை துணிச்சலுடன் செயல்பட்டு காப்பாற்றிய அனிமல் பட நடிகர்: குவியும் பாராட்டுக்கள்.!
மவொரி கலாச்சாரம்: தீவுக் கூட்டங்களை போன்ற நில அமைப்பு பெற்ற நியூசிலாந்து நாடு, உலகிலேயே அதிக தீவுக்கூட்டங்களை கொண்ட நாடுகளில் ஒன்றாகும். இங்கு மவொரி கலாச்சாரம் (Maori culture) என்பது உலகப்புகழ்பெற்ற கலாச்சாரம் ஆகும். இன்றளவும் அங்குள்ள மக்கள் பண்டிகை காலங்களில் தங்களின் பாரம்பரியத்தை கடைபிடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
எம்.பி அசத்தல் செயல்: இந்நிலையில், நியூசிலாந்து பாராளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 21 வயதுடைய இளம் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான ஹனா ரவ்ஹிட்டி (Hana Rawhiti), நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தனது மயூரி சமூக முறைப்படி பேசி அங்குள்ள மக்களின் மனதை கவர்ந்தார். அவர் பாரம்பரிய முறைப்படி உரையாற்றும் போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அவரது பேச்சினை மெய்மறந்து கேட்டு ரசித்துக் கொண்டிருந்தனர்.