Delhi Shocker: குடும்ப பிரச்சனையில் பயங்கரம்: குழந்தைகளின் கழுத்தை அறுத்து, தந்தை தற்கொலை முயற்சி.. 2 வயது பிஞ்சு பரிதாப பலி.., 2 உயிர் ஊசல்.!
கணவன் - மனைவி இடையே நடந்த பிரச்சனையால் விரக்தியடைந்த கணவன், தனது குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்துகொள்ள எண்ணி எடுத்த முயற்சியில் ஒரு குழந்தை பலியாகிவிட, தந்தை உட்பட மூவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர்.
நவம்பர் 22, புதுடெல்லி (New Delhi): வடமேற்கு டெல்லியில் உள்ள வசிராபாத் (Wazirabad), ஜெ.ஜெ கிளஸ்ட்டர் பகுதியில் வசித்து வருபவர் ராகேஷ் குமார். இவர் இன்வெர்ட்டர் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, 6 வயதுடைய ராகேஷ், சர்திக், பிரின்ஸ் (வயது 2) என மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.
தம்பதிகளிடையே கணவன் - மனைவி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று ராகேஷ் குமாரின் மனைவி, தனது வீட்டில் இருந்து மாமியாரின் வீட்டிற்கு, அவரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். வீட்டில் குழந்தைகள் தங்களின் தந்தையுடன் இருந்துள்ளனர்.
இந்நிலையில், குடும்பச்சண்டையால் விரக்தியில் இருந்த ராகேஷ் குமார், தனது 3 குழந்தைகளின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதனால் 2 வயது குழந்தை பிரின்ஸ் பரிதாபமாக உயிரிழந்தார். பிற 2 குழந்தைகள் உயிருக்கு போராடியுள்ளனர். Young Girl Raped: நண்பருடன் சேர்ந்து 21 வயது இளம்பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்: உதிரப்போக்குடன் மருத்துவமனையில் விட்டுச்சென்ற கும்பல்.!
மாமியாரை பார்த்துவிட்டு குழந்தைகளின் தாய் வீட்டிற்கு வந்தபோது, தனது 3 பிள்ளைகளும் கழுத்தில் இரத்த காயத்துடன் உயிருக்கு போராடுவதைக்கண்டு அதிர்ச்சியடைந்து இருக்கிறார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
நிகழ்விடத்திற்கு விரைந்த பாரத் நகர் காவல் நிலைய அதிகாரிகள், சிறார்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வீட்டின் அறையை சோதிக்கையில், குழந்தைகளின் தந்தை ராகேஷ் குமாரும் தற்கொலைக்கு முயன்றது அம்பலமானது. அவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ராகேஷ் குமாரிடம் மருத்துவ சிகிச்சைக்கு பின் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர். அவரின் 2 வயது குழந்தை உயிரிழந்ததால், தந்தை ராகேஷ் குமாரின் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரது பிற 2 குழந்தைகளும் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இரவு 07:30 மணியளவில் கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது.