Kistinka River Turned Red: தொழிற்சாலை கழிவு நச்சுக்களால் நிறம் மாறிப்போன நதி; இயற்கைக்கு மாறாக நடந்த நிகழ்வு.!

சர்வதேச அளவில் உள்ள பல நாடுகளிலும், தொழிற்சாலையின் கழிவுகளை சரிவர சுத்திகரிக்காமல் ஆற்றில் கலக்க விடப்படுவதால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது.

Iskitimka River Red (Photo Credit: Instagram)

டிசம்பர் 26, சைபீரியா (Russia): ரஷ்யாவில் உள்ள சைபீரியாவில், ரஷ்யாவின் முக்கிய நதிகளில் ஒன்றான இஸ்கிடிம்கா நதி பாய்கிறது. இந்நதி தற்போது பீட்ரூட் சிவப்பு நிறத்தில் மாறி உள்ளூர் மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

சிவந்த நிறத்தில் நதிகள்: ரஷியாவில் உள்ள பல்வேறு நதிகள் மாசுபாடு காரணமாக அவ்வப்போது சிவந்த நிறத்தில் மாறுவது தொடர்கதையாகியுள்ளது. தற்போது தொழில் நகரத்தை ஒட்டி அமைந்துள்ள இஸ்கிடிம்கா நதியும் நிறம் மாறியுள்ளது. Marriage Stopped for Meat: ரொம்ப கோபக்கார மாப்பிள்ளையா இருப்பார் போல., மட்டனுக்காக திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்..! 

ஆய்வு செய்யும் அதிகாரிகள்: இதற்கான காரணம் தொடர்பாக சைபீரிய கொமராவோ பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். உள்ளூர் மக்களின் தகவல்படி, அங்குள்ள நிறம் மாற்றமடைந்து நதிகளில் வாத்துகள் இறங்கவும் மறுக்கின்றன என கூறுகிறார்கள்.

வைரலாகும் வீடியோ: கடந்த 2020ம் ஆண்டும் இதேபோல நதியின் நிறம் மாற்றமடைந்து, பின் இயற்கையாக சரியானது. கடந்த நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Travel Nature Wanderlust (@worlderlust)