Sudarsan Pattnaik Congrats to Neeraj: நீரஜ் சோப்ரா, கிஷோருக்கு தனது பாணியில் நன்றி சொன்ன பிரபல மணல் சிற்பக்கலைஞர்: கொண்டாடும் இந்தியா.!

அவர்களின் முயற்சிக்கு உலகளவிலும் பாராட்டுக்கள் குவிகின்றன.

Sand Artist Wish Neeraj & Kishore (Photo Credit: Twitter)

அக்டோபர் 05, பூரி (Social Viral): சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில், 19வது ஆசிய நாடுகள் விளையாட்டுபோட்டித்தொடர் நடைபெற்று வருகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் முன்னிலையில் தொடங்கிய விளையாட்டுகள், அக். 08ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

39 பிரிவுகளில் ஆசியாவில் உள்ள நாடுகள் பல்வேறு விளையாட்டுகளில் விளையாடுகிறது. இந்தியா இன்று வரை 19 தங்க பதக்கங்களை வென்றுள்ளது. மொத்தமாக 82 பதக்கங்களில் 31 வெள்ளி, 32 வெண்கலம் ஆகும். Pune Fire: தீப்பிடித்து எறிந்த 25 இருசக்கர வாகனங்கள்: பழுது நீக்கும் இடத்தில் நடந்த சோகம்.! 

ஈட்டி எறிதலில் (Javelin throw) இந்தியா வீரர்கள் நீரஜ் சோப்ரா (Neeraj Chopra) 88.88 மீட்டர் தூரம் ஈட்டியை எரிந்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். அதனைத்தொடர்ந்து, கிஷோர் ஜெனா (Kishore Jena) வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரியை சேர்ந்த பிரபல மணல் சிற்பக்கலைஞர் சுதர்சன் பட்நாயக், தனது பாணியில் நீரஜ் சோப்ரா மற்றும் கிஷோர் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர்களால் இந்திய தேசமே பெருமை கொள்கிறது எனவும் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளார்.