அக்டோபர் 05, புனே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் இருசக்கர வாகன பழுது நீக்கும் முனையத்தில், இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 25 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின. கரும்புகை எழுந்ததை கண்டு பொதுமக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது. தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. Google Doodle World Cup 2023: உலகக்கோப்பை போட்டியை தனது பாணியில் வரவேற்ற கூகுள்: விபரம் உள்ளே..!
#WATCH | Maharashtra | Around 25 motorcycles were charred after a fire broke out at a two-wheeler service station in Pune city earlier this morning. The fire was later doused off.
(Visuals: Fire Department) pic.twitter.com/Jr807qNX0b
— ANI (@ANI) October 5, 2023
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)