Donald Trump (Photo Credit @sudarsansand X)

ஜனவரி 20, பூரி (Odisha News): அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் வென்றவர் டிரம்ப். அதனைதொடர்ந்து, அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவில் முன்னாள் அதிபர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். விழாவில், தொழிலதிபர்கள் ஜெஃப் பெசோஸ், எலான் மஸ்க் உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளனர். இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அதிபர் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க இருக்கிறார். Donald Trump Inauguration: இன்று அமெரிக்க அதிபராக பதவியேற்கும் டொனால்டு டிரம்ப்..!

டிரம்புக்கு மணல் சிற்பம்:

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் (Sudarsan Pattnaik) பூரி கடற்கரையில் 47 அடி உயரமுள்ள டொனால்டு டிரம்ப் மணல் சிற்பத்தை (Sand Art) வரைந்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், வாழ்த்துகள், வெள்ளை மாளிகைக்கு நல்வரவு என எழுதியுள்ளார். நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி வருவதை, சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், வாடிக்கையாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரம்புக்கு மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்த சுதர்சன் பட்நாயக்: