Cricket Fan Died Heart Attack: இந்திய அணியின் தோல்வியால், கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்; நண்பர்கள் கண்முன் கதறியழுது பறிபோன உயிர்.!
உலகக்கோப்பை 2023 தொடரை நடத்திய இந்திய அணியே, இறுதிப்போட்டியில் தனது முதல் தோல்வியை கொடுத்து உலகக்கோப்பையை தவறவிட்டுள்ளது.
நவம்பர் 20, ஆந்திரப்பிரதேசம் (Social Viral): 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர், 13வது சீசன் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இந்தியா - ஆஸ்திரேலியா (ICC Cricket World Cup Final 2023) அணிகள் நேற்று குஜராத் மாநிலம், அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து பலபரீட்சை நடத்தியது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து 240 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்திருந்த நிலையில், 43வது ஓவரில் 241 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணி (ODI CWC 2023 Champion), 6வது முறையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் உலகக்கோப்பையை தனதாக்கியது. நடப்பு உலகக்கோப்பை தொடரில் முதல் தோல்வியை கண்ட இந்தியா, நடப்பு உலகக்கோப்பை தொடரின் ரன்னராக மாறியது. Fake Doctor Arrested: மருத்துவம் படிக்காமலேயே வைத்தியம்: 50 வயது போலி மருத்துவரை தட்டிதூக்கிய மும்பை காவல்துறை.!
இந்திய அணியின் தோல்வி, உலகளவில் வசித்து வரும் இந்தியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நேரில் போட்டியை காணச்சென்ற பலரும், பாதியிலேயே மைதானத்தில் இருந்து சோகத்துடன் வெளியேறினர். இந்நிலையில், ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதியை (Tirupati, Andhra Pradesh) சேர்ந்த ஜோதி குமார் என்பவர், இந்திய அணியின் தோல்வியை ஏற்றுக்கொள்ள இயலாமல் மனம் கலங்கி அழுதுகொண்டு இருந்த வேளையிலேயே, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி இருக்கிறார்.
அவரை குடும்பத்தினர் & நண்பர்கள் தனியார் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர் மாரடைப்பால் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த சம்பவம் அவரின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)