TVK Maanadu: பல்லாயிரக்கணக்கில் குவிந்த தொண்டர்கள்; மேடைக்கு வருகிறார் தவெக தலைவர் விஜய்.!
எம்.ஜி.ஆர், கமலுக்கு பின் தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் நடிகர் விஜய் அரசியல் களத்தில் அதிரடியாக இறங்கி, இன்று தனது முதல் மாநாடை நடத்தவுள்ளார்.
அக்டோபர் 27, விக்கிரவாண்டி (Viluppuram News): 2026 சட்டப்பேரவை தேர்தலை இலக்காக கொண்டு, தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தோற்றுவித்துள்ள நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றத்தை கட்சியாக மாற்றி அரசியலில் களமிறங்கி இருக்கிறார். அக்.27ம் தேதியான இன்று மாலை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்ரவாண்டியில் இந்த மாநில கொள்கை திருவிழா மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு வரும் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தற்போது பல்லாயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர். வானிலை: அடுத்த 7 நாட்களுக்கு வானிலை நிலவரம் என்ன? - சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வ அறிவிப்பு.!
தமிழகமெங்கும் வரவேற்பு:
நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு திரைத்துறையினரும் வரவேற்பு அளித்துள்ள நிலையில், பலரும் நேரில் வந்துள்ளனர். நடிகர் விஜயின் பெற்றோர் சந்திர சேகர் - ஷோபனாவும் மாநாட்டு திடலுக்கு வந்துள்ளனர். இன்று மாலை தொடங்கும் நிகழ்ச்சி, இரவு 08:30 மணிக்குள் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் வைத்து கட்சியின் கொள்கை, கோட்பாடு, எதிர்கால சிந்தனை தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், சட்டம்-ஒழுங்கு, மகளிர் பாதுகாப்பு உட்பட 19 தீர்மானங்களும் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டு திடலில் அம்பேத்கர், கடலூர் அஞ்சலையம்மாள், வேலுநாச்சியார், காமராஜர், பெரியார் ஆகியோரின் உருவப்படங்களை இடம்பெற்று இருந்தன.
குவியும் வாழ்த்துக்கள்:
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு ஆதி தமிழர்களின் இசையான பறையிசையுடன் தொடங்கி, தேவராட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் நடந்து வருகிறது. விரைவில் விஜய் மேடைக்கு வருகைதந்து தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நேற்று நடைபெற்ற கங்குவா படத்தின் இசை வெளியிட்டு விழா வாயிலாக, நடிகர் விஜய்க்கு சூர்யாவும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சாக்ஷி அகர்வால் விஜயின் மாநாட்டுக்கு வருகை தருவதாக ட்விட் பதிவு:
நடிகர் பாபி சிம்ஹாவின் வாழ்த்து: