Shilpa Gautam Murder Case: ஷில்பா கௌதம் கொலை வழக்கு.. கைது செய்யப்பட்ட ஐஆர்எஸ் அதிகாரி..!

நொய்டாவின் பிஎச்இஎல் ஊழியர் கொலை வழக்கில் ஐஆர்எஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

Crime Scene with Knife File Pic (Photo Credit: Pixabay)

மே 27, நொய்டா (Uttar Pradesh News): டெல்லியில் பணிபுரியும் 2016-ம் ஆண்டு பேட்ச் இந்திய வருவாய் சேவை அதிகாரி சவுரப் மீனா. அதேநேரம் பிஹெச்இஎல் மனிதவள அதிகாரியாக இருந்தவர்தான் ஷில்பா கௌதம். இவர் தனது கணவரை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் ஷில்பாவிற்கும் மீனா என்ற நபருக்கும் டேட்டிங் ஆப்பில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மீனா ஷில்பாவை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துள்ளார். ஆனால் செய்யாமல் காலம் தாழ்த்தியும் வந்துள்ளார். Rise In Cancer In India: இந்தியாவில் இளைஞர்களுக்கு அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு.. வெளியான பகீர் தகவல்..!

இதனால் ஷில்பாவிற்கும் அவருக்கும் தொடர்ந்து சண்டையை ஏற்பட்டு கொண்டே வந்தது. இந்நிலையில் மீனா ஷில்பாவை கொலை செய்து விட்டு அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினரிடம் கூறியுள்ளார். இதனைக் கண்டறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இந்த விசாரணையில் மீனாவிற்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது.