Theni Spoiled Chicken: கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்யும் பிராய்லர் கோழிக்கடை.. தேனியில் பகீர் சம்பவம்.. குழம்பில் புழுக்கள்..!
குழந்தைகளுக்கு ஆசை ஆசையாய் கோழி இறைச்சி வாங்கி சமைத்துக்கொடுத்தால், கெட்டுப்போன இறைச்சியை கடையில் வெட்டி பரிமாறிய பகீர் சம்பவம் அம்பலமாகியுள்ளது.
ஜனவரி 11, பெரியகுளம்: தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் (Periyakulam, Theni), தென்கரை கிராமம் பட்டாளம் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதீஸ்வரன். இவர் தென்கரை மார்க்கெட்டில் இருக்கும் சுகுணா பிராய்லர்ஸின் டீலரான ஸ்டார் பிராய்லர்ஸ் கடையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் கோழி இறைச்சி வாங்கியுள்ளார். Taliban Bans Treatment: பெண்கள் ஆண் மருத்துவரிடம் சிகிச்சை பெற தடை விதிப்பு; தலிபான் நிர்வாகம் அதிர்ச்சி செயல்.!
அங்கு வாங்கிய கோழி இறைச்சியை வீட்டில் வந்து (Suguna Chicken Dealer gave spoiled chicken) மனைவியிடம் கொடுத்து குழம்பு வைத்த நிலையில், கோழிக்குழம்பில் இறைச்சியில் இருந்து புழுக்கள் நிறைந்து செத்து மிதந்துள்ளன. குழம்பை முதலில் குழந்தைகள் சாப்பிட்டதை தொடர்ந்து, 9 மணிக்கு மேல் ஆதீஸ்வரன் அதனை கவனித்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஆதீஸ்வரன், கறிக்கடைக்கு வந்து கடையின் உரிமையாளரிடம் முறையிட்டுள்ளார். இதற்கு அவர்கள் சரிவர பதில் அளிக்கவில்லை. இதனால் நகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.