நவம்பர் 08, சென்னை (Cooking Tips Tamil): கோழி இறைச்சியில் நாம் செய்யும் குழம்பு, வறுவல், பொரியல் நமது நாவை நாட்டியமாட செய்பவை. வார இறுதி விடுமுறை நாளில் காலையிலேயே எழுந்து இறைச்சி வாங்கி பலரும் சமைத்து சாப்பிட்டு, நல்ல உறக்கத்தை ஏற்றுக்கொள்வார்கள். இது அடுத்த வாரத்தில் அவர்களின் பணியை தொடர்ந்து செய்ய உதவுகிறது. இந்த செய்தித்தொகுப்பில் எப்போதும் போல அல்லாமல் சுவையான சிக்கன் பொடிமாஸ் எப்படி செய்வது என காணலாம். Chettinad Mutton kuzhambu: செட்டிநாடு ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்வது எப்படி?.. சண்டே ஸ்பெஷல் ரெசிபி.!
தேவையான பொருட்கள்:
எலும்பு இல்லாத சிக்கன் - 500 கிராம்
வெங்காயம் - 5
இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
கரம் மசாலா, மல்லித்தூள், மிளகாய் தூள் - தலா 2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு & எண்ணெய் - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவைக்கேற்ப
செய்முறை:
- முதலில் சிக்கனை நன்கு கழுவி சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின் மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சிக்கனுடன் சேர்த்து வேக வைக்கவும்.
- அடுத்ததாக வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
- பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பில்லை போட்டு முதலில் தாளிக்க வேண்டும். அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
- இவை பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அடுத்து சிக்கன் சேர்த்து மல்லித்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
- இறுதியாக கொத்தமல்லி தழையை தூவி இறக்கினால் சுவையான சிக்கன் பொடிமாஸ் தயார்.