Victim Pandiselvi | Chicken Rice File Pic (Photo Credit: @Mansoorlee X / Facebook)

ஆகஸ்ட் 09, மதுரை (Madurai News): மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம், பொன்னமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் கருப்பையா. இவர் கூலித் தொழிலாளி ஆவார். இவரின் மகள் பாண்டிச்செல்வி (வயது 24). பட்டதாரி பெண்ணான பாண்டிச்செல்வி, தற்போது திருமங்கலம் அண்ணா நகர் பகுதியில் வசித்து வருகிறார். அங்குள்ள விருதுநகர் சாலையில் இருக்கும் தனியார் உணவகத்தில், நேற்று மதியம் பாண்டிச்செல்வி சாப்பிட சிக்கன் ரைஸ் வாங்கி இருக்கிறார். பின் அதனை வீட்டுக்கு எடுத்து வந்து சாப்பிட்டுள்ளார். Shocking Video: ரசாயனம் தெளித்து சேலம் நகைக்கடையில் கொள்ளை முயற்சி.. பதறவைக்கும் காட்சிகள்.! 

சிக்கன் ரைஸ் மரணம் (Chicken Rice Death):

சிக்கன் ரைஸை சாப்பிட்ட பின்னர், சிறிது நேரத்தில் திடீரென வாந்தி எடுத்துள்ளார். அடுத்த சில நொடிகளில் மயங்கி விழுந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பாண்டிச்செல்வியின் பெற்றோர், பெண்ணை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். அங்கு அவருக்கு உடல்நிலை மோசமானதால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் காவல்துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வானிலை: செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை மழை அறிவிப்பு.! 

Chicken Rice | Dead Body File Pic (Photo Credit: YouTube | Pixabay)
Chicken Rice | Dead Body File Pic (Photo Credit: YouTube | Pixabay)

சிக்கன் ரைஸ் மரணம் ஏன்?

கடைகளில் தயாரிக்கப்படும் சிக்கன் ரைஸில் பழைய இறைச்சிகள் பயன்படுத்தப்பட்டாலோ, அதனை நீண்ட நாட்கள் பிரீஸரில் வைத்து பயன்படுத்தினாலோ உணவு விஷத்தன்மை அடைய வாய்ப்புகள் உண்டு. ஆகையால், கடைகளில் விற்பனை செய்யப்படும் இறைச்சி உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வீட்டில் செய்து சாப்பிடுவது நல்லது. கட்டாயம் கடையில் சாப்பிட வேண்டும் என்ற பட்சத்தில், தரமான உணவகமா அது? உணவின் சுவை எப்படி இருக்கிறது? என்பதை சோதித்து பார்த்து சாப்பிட வேண்டும். ஆசையாக இருக்கிறது என எதையும் கவனிக்காமல் சாப்பிட்டால் கட்டாயம் ஏதேனும் ஒரு சோகத்தை எதிர்கொள்ள நேரிடும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது.