Tirunelveli Shocker: கோவில் திருவிழாவில் நடந்த தகராறு; சகோதரர்கள் இருவர் குத்திக்கொலை.. நெல்லையில் பதற்றம்.!

ஆண்டுக்கு ஒருமுறை கூட்டமாக சந்தித்து கோவில் திருவிழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வேளையில், ஒட்டுமொத்த சொந்தங்களையும் பதறவைக்கும் வகையில் கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது .

Murder Blood (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 17, திசையன்விளை (Tirunelveli News): திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை (Thisayanvilai), காரம்பாடு, அப்புவிளை பகுதியில் உள்ள கோவிலில் திருவிழா நடைபெற்று இருக்கிறது. இக்கோவில் குடும்ப கோவில் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற திருவிழாவில் இருதரப்பு மோதல் உருவாகி இருக்கிறது. இந்த சம்பவத்தில் சகோதரர்களான மதியழகன் மற்றும் மதிராஜா ஆகியோர் கத்தியால் குத்திப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். Thiruvarur Police: நள்ளிரவில் அதிரடி காண்பித்த திருவாரூர் காவல்துறை; ரௌடி என்கவுன்டரில் சுட்டுப்பிடிப்பு.! 

4 பேருக்கு அதிகாரிகள் வலைவீச்சு:

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த திசையன்விளை காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இக்கொலை வழக்கில் தொடர்புடையதாக ப்ரூன், ராஜ்குமார், விபின் உட்பட 4 பேரை தேடி வருகின்றனர். கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த மகேஸ்வரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் கைதானால் மட்டுமே கொலைக்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.