Hit By Train While Making Reel: முத்திப்போன ரீல்ஸ் மோகம்.. லைக்குக்காக உயிரைப் பறிகொடுத்த குடும்பம்.!
உத்தரப்பிரதேசத்தில் தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் பதிவு செய்யும் போது, பயணிகள் ரயிலில் அடிபட்டு ஒரு நபர் தனது மனைவி மற்றும் மூன்று வயது மகனுடன் உயிரிழந்தார்.
செப்டம்பர் 12, சீதாபூர் (Uttar Pradesh News): இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் (Reels) மோகம் இன்றைய 2கே கிட்ஸ்களை பாடாய் படுத்துகிறது.. வெறும் லைக் மற்றும் ஷேருக்காக வாழ்க்கையை தொலைத்து நிற்கிறார்கள். யூடியூப்பில் வீடியோ போட்டால் காசு சம்பாதிக்கலாம். பேஸ்புக்கில் வீடியோ போட்டால் காசு சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் ரீல்ஸ் போட்டு பாலோயர்களை ஏற்றி சீக்கிரமாக பணக்காரன் ஆக வேண்டும் என்று இன்றைய இளம் தலைமுறையினர் விரும்புகிறார்கள். அதேநேரம் சிலர் பொழுதுபோக்கிற்காக இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட ஆரம்பித்து இன்று அதை முழுநேர வேலையாக செய்கிறார்கள். சிலரோ லைக்குக்காக உயிரைப் பணயம் வைக்கிறார்கள். 2 Youth's Escape from Death: நூலிழையில் உயிரை கையில் பிடித்து, நீந்தி உயிர்தப்பிய இளைஞர்கள்; அலட்சியத்தால் நட்டாற்றில் கதறிய சோகம்.!
அந்த வகையில் உத்தரப்பிரதேசத்திலுள்ள உமரியா கிராமத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ஷேக் தோலா அருகே லஹர்பூரைச் சேர்ந்தவர்கள் முகமது அகமது (26), அவரது மனைவி நஜ்னீன் (24) மற்றும் அவர்களது மூன்று வயது மகன் அப்துல்லா. இவர்கள் இன்று காலை ரயில் தண்டவாளத்தில்ரீல்ஸ் பதிவு செய்து கொண்டிருந்த போது ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து 3 பேரின் சடலங்களும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.