Madhya Pradesh Floods (Photo Credit: @TimesNow X)

செப்டம்பர் 12, அசோக் நகர் (Madhya Pradesh News): தென்மேற்கு பருவமழை வடமாநிலங்களில் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக வங்கக்கடல் பகுதியில் தொடர்ந்து வாரம் ஒருமுறை காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி ஒடிசா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை புரட்டியெடுத்து வருகிறது. இதனால் அங்குள்ள முக்கிய நதிகள், அணைகள் நிரம்பி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. Viral Video: வந்தேபாரத் ரயில் கண்ணாடி உடைப்பு.. பகீர் வீடியோ வைரல்.!

தத்தளித்த இளைஞர்கள்:

இதனிடையே, மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள அசோக் நகர் மாவட்டத்தில் செல்லும் ஆறில், இளைஞர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் தரைப்பாலத்தை கடந்து செல்ல முற்பட்டனர். வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையிலும், அலட்சியம் & அதீத நம்பிக்கையால் பயணித்தவர்கள், நடுவழியில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். பின் இருவரும் தங்களின் இருசக்கர வாகனத்தை பிடித்து நின்ற நிலையில், ஒருகட்டத்தில் இருசக்கர வாகனம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இளைஞர்கள் இருவரும் ஆற்றில் அடுத்தடுத்து குதித்து நீந்தி கரையேறி தப்பித்தார். இந்த விஷயம் குறித்த காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது. மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

வெள்ளத்தில் நடுவழியில் சிக்கிக்கொண்ட இளைஞர்கள் நீந்தி தப்பிய காணொளி: