UP Woman Gets Husband Killed: தங்கச்சிக்கு கிப்ட் வாங்கிய அண்ணன்.. கொலைவெறியில் அடித்துக் கொன்ற மனைவி..!
உத்திரப் பிரதேசத்தில் தங்கையின் திருமணத்திற்கு பரிசு வாங்க திட்டமிட்ட கணவரை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 24, பாரபங்கி (Uttar Pradesh News): உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்தவர் தான் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (வயது 35). இவரின் தங்கைக்கு ஏப்ரல் 26 ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. அதனைத் தொடர்ந்து, சந்திர பிரகாஷ் அவரது தங்கையின் திருமணத்திற்கு தங்க மோதிரம் மற்றும் தொலைக்காட்சி ஒன்றை பரிசளிக்க விரும்பியுள்ளார். ஆனால் இதற்கு சந்திர பிரகாஷ் மனைவி சாபி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். Aparna Das Marriage With Actor Deepak Parambol: ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ தீபக்கை கரம்பிடித்த அபர்ணா தாஸ்.. வாழ்த்து தெரிவித்து வரும் ரசிகர்கள்..!
இதனால் இருவரிடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. கோபமடைந்த சாபி, "சந்திர பிரகாஷுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்" என்று தனது சகோதரர்களை அழைத்துள்ளார். அவர்கள் சந்திர பிரகாஷை, சுமார் ஒரு மணி நேரம் குச்சிகளால் கொடூரமாக தாக்கி உள்ளனர். இத்தகவலறிந்து சந்திர பிரகாஷின் குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சாபி மற்றும் அவரது சகோதரர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.