Father Killed by Son: மது அருந்த பணம் கொடுக்காத தந்தை சுத்தியலால் அடித்துக்கொலை; மகனின் நெஞ்சை பதறவைக்கும் செயல்.!

இன்றளவில் அவற்றால் நடக்கும் கொலையும், குற்றமும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.

Liquor Hammer (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 21, லக்னோ (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ, இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் குஷி ராம் சைனி (வயது 70). இவரின் இளைய மகன் ஹேமந்த் சைனி (வயது 35). குஷி ராமுக்கு ரிங்கு சைனி என்ற மூத்த மகன் இருக்கிறார். இவர்கள் அனைவரும் தங்களுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார்கள். மேல்தளத்தில் ரிங்கு சைனி வசிக்கிறார். கீழ்தளத்தில் குஷி ராம், அவரின் தந்தை மற்றும் இளையமகன் ஆகியோர் வசித்து வருகின்றனர்.

பணம் கேட்டு தொந்தரவு: பெயிண்டராக வேலை பார்த்து வரும் ஹேமந்த் சைனி, கடந்த சில மாதங்களாகவே வேலைக்கு செல்லாமல் ஊரைச் சுற்றி வந்துள்ளார். மேலும், மது, கஞ்சா என போதைப்பழக்கத்திற்கும் அடிமையான ஹேமந்த், எந்நேரமும் போதையிலேயே சுற்றி வந்துள்ளார். சில நேரம் வீட்டில் உள்ளவர்களிடம் பணம் கேட்டும் (Son Killed Father in Lucknow) போதையேற்றி வாழ்க்கையை நகர்த்தி இருக்கிறார். நேற்றும் ஹேமந்த் சைனி தனது குடும்பத்தாரிடம் மதுபானம் வாங்க பணம் கேட்டு இருக்கிறார். Ameen Sayani Passed Away: மூத்த இந்திய வானொலி தொகுப்பாளர் அமீன் சயனி காலமானார்; அதிகாரபூர்வ அறிவிப்பு.! 

Crime / Murder (Photo Credit: Pixabay)

மகனை கிண்டலடித்த தந்தை: அப்போது பணம் கொடுக்க மறுத்த ஹேமந்த் சைனியின் தந்தை குஷி ராம் சைனி, தனது மகனின் செயல்பாடுகளை கண்டித்து இருக்கிறார். கிண்டலடிக்கும் வகையிலும் பேசி இருக்கிறார். இதனால் ஆவேசமான தந்தை - மகன் இடையே இருதரப்பு வாக்குவாதம் கடுமையாக நடந்துள்ளது. இதனைக்கேட்டு பொறுமையை இழந்த மூத்த மகன், கீழ்தளத்திற்கு வந்து தந்தை மற்றும் சகோதரனை கண்டித்து அமைதிப்படுத்தி பின் மேலே சென்றுள்ளார்.

ஆத்திரத்தில் நடந்த படுபயங்கர சம்பவம்: சில மணிநேரத்திற்குள் ரிங்கு சைனியின் தாத்தா கதறியபடி அழுதுள்ளார். பதறியபடி ரிங்கு வந்து பார்த்தபோது, தந்தை கொலை செய்ய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். அவரின் சகோதரர் இரத்தக்கறை படிந்த சுத்தியலுடன் நின்றுள்ளார். தந்தை கொலை செய்யப்பட்டதை உணர்ந்த ரிங்கு சைனி, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் குஷி ராமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் ஹேமந்த் சைனியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.