Holi Celebration Rules Offence Penalty: ஹோலி கொண்டாட்டத்தால் ஆப்பு; விதியை மீறி வாகனத்தை இயக்கியதாக இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ.80,500 அபராதம்.!
வடமாநிலங்களில் சிறப்பிக்கப்பட்ட ஹோலி பண்டிகையை வித்தியாசமாக கொண்டாடி மக்களிடம் வரவேற்பு பெற நினைத்தவர்கள் வழக்கில் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.
மார்ச் 29, நொய்டா (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியை சேர்ந்த 2 இளம்பெண்கள் மற்றும் ஒரு இளைஞர் சேர்ந்து, மூவராக ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் ஹோலி கொண்டாட்டம் காண்போர் முகம் சுளிக்கும் வகையில், இருசக்கர வாகனத்தில் விதியை மீறி வாகனத்தை இயக்கி காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. இன்ஸ்டாகிராம் இலட்சக்கணக்கில் பின்தொடர்பாளர்களை கொண்ட இவர்களில் ஒரு பெண் படித்து, வேலைக்கு சென்று ரீல்ஸ் மோகத்தில் பணியை இழந்தவர். மற்றொரு பெண்மணி எப்போதும் ரீல்ஸ் என அடிமையாக இருந்தவர். இவர்களுடன் இருந்த நண்பர் ஒருவர், அவ்வப்போது இவர்களுக்கு தேவையான உதவி செய்வது, கேமிராவில் வீடியோ எடுப்பது என இருந்து வந்துள்ளனர். March 29 Release Tamil Movies: ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை.. மார்ச் 29 அன்று ரிலீசாகும் தமிழ் படங்கள்... அசத்தல் லிஸ்ட் இதோ..!
ரூ.80,500 அபராதம் விதிக்கப்பட்ட இன்ஸ்டா பிரபலம்: சமீபகாலமாக ஹோலி பண்டிகையை முன்னிட்டு இவர்கள் இருசக்கர வாகனத்தில் ஆபாசமான வகையில் பண்டிகையை சிறப்பிப்பது போன்ற காணொளி வெளியாகி இருந்தது. எல்லை மீறிய ஆபாசம், விதியை மீறிய செயல் என அதற்கு கண்டனம் குவித்தது. இருசக்கர வாகனத்தின் விதியை மீறி செயல்பட்டது வீடியோ ஆதாரத்துடன் காவல் துறையினரின் கவனத்திற்கு சென்றது. இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போக்குவரத்து காவல் துறையினர், விதியை மீறி வாகனத்தை இயக்குதல் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து ரூ.33,000 அபராதம் விதித்தனர். இந்நிலையில், இவர்கள் எல்லைமீறி மற்றொரு காணொளியும் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. இதனால் கூடுதலாக ரூ.47,500 அளவில் அபராதம் விதித்த அதிகாரிகள், மொத்தமாக ரூ.80,500 ஐ செலுத்த உத்தரவிட்டுள்ளனர்.