Viral Video: மலைப்பாம்பிடம் சிக்கி உயிர் தப்பிய இளைஞர்: இயற்கை உபாதையை கழிக்கச்சென்ற இடத்தில் திகில் சம்பவம்.!

மத்தியப் பிரதேசத்தில் மலம் கழிக்கச் சென்ற இளைஞரை மலைப்பாம்பு ஒன்று தின்ன முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Viral Video (Photo Credit: @ajay_media X)

ஜூலை 24, ஜபல்பூர் (Madhya Pradesh News): பொதுவாக பாம்புகள் (Snake) மிகவும் கடினமான இடுக்குகளுக்குள் பதுங்கிக் கொண்டு தங்களை திறமையாக மறைத்துக் கொள்ளும் திறன் கொண்டவை. வீடு மட்டுமல்லாமல், கார், டூவீலர் போன்ற வாகனங்களில் பாம்புகள் தஞ்சமடையும் சம்பவங்கள் இந்தியாவில் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. பாம்புகள் வெப்பமான இடத்தை தேடுவதுதான் இதற்கு காரணம். சுற்றுப்புற சூழல் மிகவும் குளிர்ச்சியாக மாறும்போது, பாம்புகளுக்கு உடலை வெப்பமாக வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். எனவே வெப்பமான இடங்களை நோக்கி அவை படையெடுக்கும். Easy Homemade Noodles: குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நூடுல்ஸ்.. வீட்டிலேயே செய்வது எப்படி?!

இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் சாலையோரம் மலம் கழிக்கச் சென்ற இளைஞரை மலைப்பாம்பு ஒன்று தின்ன முயன்றுள்ளது. இதை பார்த்த மற்றவர்கள் அலற தொடங்கியுள்ளனர். பாம்பு தனது பிடியை இறுக்கியுள்ளது. 10 அடி நீளம் கொண்ட பாம்பை இளைஜரால் விடுவிக்க முடியவில்லை. அப்போது கிராம மக்கள் மலைப்பாம்பைக் கொன்று அந்த இளைஞனின் உயிரைக் காப்பாற்றினர். இது தொடர்பான வீடியோ இப்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.