Superman First Look: டேவிட் கோரன்ஸ்வெட் நடிக்கும் சூப்பர்மேன்.. புதிய போஸ்டர் வெளியீடு..!

ஜேம்ஸ் கன் இயக்கும் புதிய ‘சூப்பர்மேன்’ படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Superman (Photo Credit: Instagram)

மே 07, கலிபோர்னியா (Cinema News): டிசி காமிக்ஸின் புகழ்பெற்ற கதாபாத்திரம் சூப்பர்மேன் (Superman). இதனை அடிப்படையாகக் கொண்டு 70-களில் இருந்து திரைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வந்தன. ஜாக் ஸ்னைடர் இயக்கிய டிசி படங்களில் சூப்பர்மேனாக ஹென்றி கெவில் நடித்திருந்தார். தற்போது டிசி காமிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் நிறைவடைந்ததால் ஹென்றி கெவில் டிசி படங்களில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில் மார்வெல் நிறுவன படங்களை இயக்கிய ஜேம்ஸ் கன் தற்போது டிசி நிறுவனத்துக்காக பணியாற்றி வருகிறார். அடுத்த வெளியாகவுள்ள புதிய சூப்பர்மேன் படத்தை இயக்கிவருகிறார். இதில் சூப்பர்மேனாக டேவிட் கோரன்ஸ்வெட் நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. Panama election: பனாமா அதிபர் தேர்தல்.. ஜோஸ் ரவுல் முலினோ வெற்றி..!

 

View this post on Instagram

 

A post shared by James Gunn (@jamesgunn)

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)