மே 07, பனாமா (World News): பனாமாவின் அதிபர் தேர்தலில் (Panama's presidential election) ஜோஸ் ரவுல் முலினோ வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு வயது 63. இவர் முன்னாள் அதிபர் ரிக்கார்டோ மார்டினெல்லிக்கு மாற்றாக கடைசி நேரத்தில் ரியலைசிங் கோல்ஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. England's Mandate for Single-Sex Toilets: இனி ஒவ்வொரு பாலினத்தருக்கும் தனி தனி கழிப்பறைகள்.. இங்கிலாந்து அரசின் அதிரடி அறிவிப்பு..!
இவர் மொத்தமாக 34.35 சதவீத வாக்குகளை பெற்றார். தனது போட்டியாளரை காட்டிலும் 9 புள்ளிகள் முன்னிலை பெற்று வெற்றி வேட்பாளர் ஆனார். பண மோசடி விவகாரத்தில் 10 ஆண்டு காலம் ரிக்கார்டோ மார்டினெல்லி சிறை தண்டனை பெற்றார். அதன் காரணமாக தேர்தலில் அவரால் போட்டியிட முடியவில்லை. அவருக்கு மாற்றாக ஜோஸ் ரவுல் முலினோ (José Raúl Mulino) போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.