Thalapathi 67 Update: லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் கைகோர்த்த தளபதி விஜய் - கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்.!
நடிகர் விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் கைகோர்த்துள்ள நிலையில், அப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், இளையதளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகை மாளவிகா மோகனன் உட்பட பலர் நடித்து கடந்த 2021ல் வெளியான திரைப்படம் மாஸ்டர். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனையடுத்து. லோகேஷ் கனகராஜ் விக்ரம், கைதி 2 என அடுத்தடுத்த படங்களை இயக்கி வருகிறார். கமலின் விக்ரம் திரைப்படமும் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் மீண்டும் நடிகர் விஜயுடன் கைகோர்த்துள்ளார். விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 67 படத்தை லோகேஷ் இயக்குகிறார். அனிரூத் இசையமைக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Lokesh Happy to Join with Vijay Joseph 👇
7 Screen Studio Announcement 🔥
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)