Viral Video: நாகப்பாம்பை வெறும் கையால் பிடித்த காவலர் மரணம்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!
மத்திய பிரதேசத்தில் பாதுகாப்பு கவசம் இல்லாமல் நாகப்பாம்பைப் பிடிக்கும் ஒரு போலீஸ்காரரின் வீடியோ வைரலாகி வருகிறது.
செப்டம்பர் 22, இந்தூர் (Madhya Pradesh News): மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் (Indore) முதல் பட்டாலியனில் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் பணியாற்றியவரும், பாம்பு பிடிப்பதில் அனுபவமுள்ளவருமான கான்ஸ்டபிள் சந்தோஷ், நேற்று முன்தினம் (செப்டம்பர் 20) இரவு நாகப்பாம்பு கடித்து இறந்தார். அதிகாரிகளின் கூற்றுப்படி, இரவு 9 மணியளவில் போலீஸ் குதிரை லாயத்தில் ஒரு பாம்பு காணப்பட்டது. உடனே, கான்ஸ்டபிள் சந்தோஷ், அதைப் பிடிக்க அனுப்பப்பட்டார். அங்கு அவர் கையுறைகள் அல்லது பாதுகாப்பு கவசம் இல்லாமல் பிடித்தார். உடனே, நாகப்பாம்பு அவரது கையில் கடித்தது. உடனே, சக அதிகாரிகள் உடனடியாக சந்தோஷை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சந்தோஷுக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இதுகுறித்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து தகராறில் மனைவி, மாமியார் தொல்லை.. விவசாயி விஷம் குடித்து தற்கொலை..!
வீடியோ இதோ:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)