Pawan Kalyan as Deputy CM of Andhra Pradesh: ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் துணை முதல்வராக அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றார் பவன் கல்யாண்..!
2014ல் அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் பவன் கல்யாண், இன்று ஜனசேனா கட்சியின் தலைவராகவும், ஆந்திர துணை முதல்வராகவும் இருக்கிறார். அவரின் வளர்ச்சி ஆந்திர அரசியலில் முக்கிய விஷயமாக கவனிக்கப்படுகிறது.
ஜூன் 19, அமராவதி (Andhra Pradesh News): 2024 ஆந்திர பிரதேசம் மாநில சட்டப்பேரவை தேர்தலில், ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் - சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி (Telugu Desam Party) நேரடியாக ஆட்சிக்காக அரசியல் மோதலில் ஈடுபட்டன. நடைபெற்று முடிந்த தேர்தல் வாக்குபதிவின் அடிப்படையில் தெலுங்குதேசம் - பவன் கல்யாணின் (Jana Sena) ஜனசேனா - பாஜக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் (YSR Congress Party) கட்சியால் எதிர்க்கட்சி என்ற பொறுப்பை கூட அடைய இயலாத பின்னடைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அம்மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு நான்காவது முறை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொண்டார். சந்திரபாபு நாயுடுவை தொடர்ந்து, அவருடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டு 17க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிகண்ட நடிகர் பவன் கல்யாணும் (Andhra DCM Pawan Kalyan) அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்ப்படலாம் என பேச்சுக்கள் எழுந்த நிலையில், சமீபத்தில் அவருக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், இன்று பவன் கல்யாண் துணை முதல்வராக அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். அவரிடம் பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சி, சுற்றுச்சூழல், வனம் மற்றும் அறிவியல், தொழில்நுட்பங்கள் துறை வழங்கப்பட்டுள்ளது. Pokkiri Re Release: விஜய் ரசிகர்களே கொண்டாடட்டத்துக்கு தயாரா? - ரீரிலீஸ் செய்யப்படும் "போக்கிரி" - ட்ரைலர் இதோ.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)