IPL Auction 2025 Live

2 Killed Gun Fire in Bihar: காதல் விவகாரத்தில் குடும்பத்தினர் மீது சரமாரி துப்பாக்கிசூடு: ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி., 4 பேர் படுகாயம்.!

குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாக கோவிலுக்கு சென்று, சாமிதரிசனத்தை நிறைவு செய்து வரும்போது காதல் விவகாரத்தில் குடும்பத்தினருக்கு எதிராக நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் 2 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.

Visual From Video (Photo Credit: @ANI X)

நவம்பர் 20, லஹிஸாரை (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள லஹிஸரை மாவட்டம், பஞ்சாபி முஹல்லா, கபையா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த குடும்பத்தினர், இன்று சஹத் காட் பகுதியில் நடைபெற்ற பூஜையில் கலந்துகொண்டு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளனர். அச்சமயம் மர்ம நபர் நடத்திய துப்பாக்கியசூட்டில் 2 பேர் பரிதாபமாக பலியாகினர், 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அங்குள்ள பெகுசராய் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக பாட்னா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த லஹிஸரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கஜ் குமார், நேரடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகிறார். முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் துப்பாக்கிசூடு சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. குற்றவாளிக்கு வலைவீசப்பட்டுள்ளது. AAP Party Gayatri Bishnoi Complaint: ஏசி கோச்சில் மகளிரணி தலைவி முன்பு சரக்கடித்து ரகளை செய்த இளைஞர்கள்: போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் பேரதிர்ச்சி.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)