Visual Snipped from Video (Photo Credit: X)

நவம்பர் 20, ராஜஸ்தான் (Social Viral): இராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த ஆம் ஆத்மி கட்சியின் மகளிர் அணி தலைவர் காயத்ரி பிஷ்ணோய் (Gayatri Bishnoi). இவர் சம்பவத்தன்று ஜெய்ப்பூரில் இருந்து ஸ்ரீ கங்காநகர் செல்லும் விரைவு இரயிலில் பயணம் மேற்கொண்டு இருந்தார். அச்சமயம் இரயிலுக்குள், ஏசி வகுப்புக்குள் இருந்த 3 இளைஞர்கள், போதையில் பயணிகளிடம் தகராறு செய்துள்ளனர்.

காயத்ரியையும், அவரின் பின்னணி தெரியாமல் அவதூறாக பேசியிருக்கின்றனர். அவர் முன்பே மதுபானமும் அருந்தியுள்ளனர். இதனையடுத்து இரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளிப்பதற்காக அதிகாரிகளை தேடிய போது, எவரும் அங்கு இல்லை. மேலும், டி.டி,ஆர் பணியில் இருந்தாலும், அவர்களால் போதை கும்பலை தட்டிக்கேட்க இயலவில்லை. Cricket Fan Died Heart Attack: இந்திய அணியின் தோல்வியால், கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்; நண்பர்கள் கண்முன் கதறியழுது பறிபோன உயிர்.! 

பின், இரயில்வே காவல்துறை கட்டுப்பாட்டு மையத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்படவே, ஒரு மணி நேரம் தாமதமாக காவல்துறையினர் வந்து இளைஞர்களை கைது செய்துள்ளனர். மேலும், இது போன்று காவல்துறையினர் இல்லாமல் இருப்பது குற்றத்திற்கு வழிவகை செய்யும்.

ஒரு மணி நேரத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், அதற்கு யார் பொறுப்பு? என்றும் காயத்ரி தனது கேள்வியை முன் வைத்துள்ளார். இந்த சம்பவம் நள்ளிரவு 01:00 மணி அளவில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வை வீடியோ பதிவு செய்துள்ள காயத்ரி, தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்திலும் பகிர்ந்து, இரயிலில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

பொதுவாக இரயில்களில் ஏசி வகுப்பு பயணப்பெட்டி மிகவும் பாதுகாப்பு தன்மை கொண்டதாகவும், எந்நேரமும் காவலர் கண்காணிப்பு இருக்கும் இடமாகவும் கருதப்படும். ஆனால், ஏசி வகுப்பு பெட்டியிலேயே காவலர் குறைபாடு இருந்ததாக காயத்ரி தெரிவித்தது, ஏசி வகுப்பு பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.