Rahul Gandhi: ராகுல் காந்திக்கு எதிரான தீர்ப்பு விவகாரம்; இந்தியா முழுவதும் தொடங்கியது போராட்டம்.!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் விதித்த தீர்ப்பால், நாடு முழுவதும் அவரின் ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மார்ச் 23, சூரத் (Gujarath News): கடந்த 2019ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் (Karnataka) நடைபெற்ற தேர்தல் பிரச்சார (Election Campaign) கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் (Congress) கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி (Rahul Gandhi), பிரதமர் நரேந்திர (Narendra Modi) மோடியை அவமதிக்கும் வகையில் பேசினார். இதுகுறித்த வழக்கு விசாரணை குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் (Surat Court) நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று ராகுல்காந்தியை குற்றவாளியாக அறிவித்த நீதிபதிகள், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டனர். பின்னர், அவருக்கு அதே நீதிமன்றத்தில் 30 நாட்களுக்கான முன் ஜாமீனும் பெறப்பட்டன. ராகுல் காந்தி மீதான தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் இந்தியா முழுவதும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். Kanchipuram Fire Accident: மறுஉத்தரவு வரும் வரையில் காஞ்சிபுரத்தில் பட்டாசு ஆலை செயல்பாடுகளை நிறுத்த உத்தரவு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)