Gold Smuggling: தங்கம், வெள்ளியை வைத்து மின்சாதன பொருட்கள் உருவாக்கி புதிய கடத்தல் திட்டம்; அதிகாரிகளிடம் சிக்கிய தங்கம்.!
தங்கக்கடத்தலில் ஈடுபடும் கும்பல் புதுப்புது நுட்பங்களை கண்டறிந்து முயற்சிகளில் ஈடுபட்டாலும், அவை அனைத்தும் அதிகாரிகளால் முறியடிக்கப்படுகிறது.
ஜனவரி 29, புதுடெல்லி (New Delhi): இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்படும் தங்கத்தை தடுக்கவும், அதனை கண்டறிந்து பறிமுதல் செய்யவும் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் சுங்கத்துறையினர் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று டெல்லிக்கு ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்த (Delhi Customs) பயணி ஒருவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது, மின்சார மீட்டர்கள் என்று கூறப்பட்ட மீட்டர் வழக்கத்திற்கு மாறான எடையுடன் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து, அதிகாரிகள் அதனை பிரித்து சோதனை செய்தபோது, தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய பொருட்களால் மின்சார மீட்டர் தயாரிக்கப்பட்டு இருப்பது உறுதியானது. நூதன முறையில் புதிய முயற்சியாக மீட்டர்களை வெள்ளியில் உருக்கி தயாரித்து, அதற்கு வர்ணம் பூசி திட்டத்துடன் அனுப்பி வைத்துள்ளனர். இந்த முயற்சி அதிகாரிகளின் திறன்வாய்ந்த செயலால் பறிபோனது. 56 மீட்டர்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், ரூபாய் 10 கோடி மதிப்பிலான தங்கம் & வெள்ளிகளை பறிமுதல் செய்துள்ளனர். 16.6 கிலோ அளவிலான வெள்ளி, 39.7 கிலோ தங்கம் உருக்கி மின் மீட்டராக மாற்றம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. Farmer Suicide: கடன் தொல்லையால் விவசாயி விபரீதம்; தோட்டத்திலேயே தூக்கிட்டு தற்கொலை.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)